குணசேன விதானகே (சிங்கள மூலம்), மடுளுகிரியே விஜேரத்ன (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (21), 22-92 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-4397-9. குணசேன விதானகே எழுதிய பாலம், என் மகனின் கதை, ஆடு பிடித்தல், மானுடத்திற்கு குண்டு, தெய்வமே ஆகிய ஐந்து சிங்களச் சிறுகதைகள் இந்நூ லில் இடம்பெற்றுள்ளன. “குணசேன விதானகேயின் வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும்” என்ற தலைப்பில் மடுளுகிரியே விஜேரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65510).