கெக்கிறாவ ஸுலைஹா. கெகிறாவ: கெக்கிறாவ ஸுலைஹா, 32/21, செக்குபிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xi, (3), 78 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955- 53263-2-2. அம்ரிதா ப்ரிதம் எழுதிய “மண்ணெண்ணெய் நெடி”, ஆர்.கே.நாராயணன் எழுதிய “அந்த இருப்பிடம்”, ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய “மழையில் நனைந்த பூனை”, என்டன் செக்கோவ் எழுதிய “தும்மல்”, என்டன் செக்கோவ் எழுதிய “அந்த வளைந்த கண்ணாடி”, ப்ரேம்சந்த் எழுதிய “தாகூரின் கிணறு”, ஜேம்ஸ் ஜொய்ஸ் எழுதிய “ஈவ்லின்”, கேட் வோல்கர் எழுதிய “காதற் கடிதங்கள்”, ஒஸ்கார் வைல்ட் எழுதிய “வானம்பாடியும் ரோஜாவும்”, வில்லியம் சோமசெட் மோம் எழுதிய “மச்சத்துடனான அம்மனிதன்” ஆகிய பத்துச் சிறுகதைகள் இந்நூலில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன. பெண்ணுக்குள் மறைந்து நிற்கும் காதலின் தவிப்பும், அவளது சிதைக்கப்பட்ட மனோச் சித்திரங்களும், அறியாமையினால் பெண் விடும் தவறுகளும், ஆக்கிரமிப்பின் பூதக் கரங்களில் நசுங்கிச் சிதையும் அவளது வாழ்வுகளும், அடுத்தவரின் வக்கிரங்களுக்குள் சிதைந்துபோன, தொலைந்துபோன பெண்ணவளின் தன்மான உணர்ச்சிகளும் இக்கதைகளை எம்மவருக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவருகின்றன.