14733 அமெரிக்கா. வ.ந.கிரிதரன்.

மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 2வது பதிப்பு, மே 2019, 1வது பதிப்பு, 1996. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 58 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4041-14-1. ஈழத்துத் தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். 83 இனக்கலவரத்தைத் தொடர்ந்து புகலிடம் நாடிச்சென்ற இலங்கைத் தமிழ் அகதியொருவனின் புரூக்லீன், நியூயார்க்கில் அமைந்துள்ள அமெரிக்கத்தடுப்பு முகாம் அனுபவத்தை இந்நாவல் விபரிக்கின்றது. இதன் முதற்பதிப்பு தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகத்தின் மூலமும், கனடாவில் மங்கை பதிப்பகத்தின் மூலமும் கூட்டாக வெளியிடப்பட்டிருந்தது. இந்நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பு மட்டக்களப்பு மகுடம் பதிப்பகத்தினரின் இருபதாவது வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நாவலாசிரியர் 2000ம் ஆண்டிலிருந்து “பதிவுகள்” இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராகவும் இருந்து வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

14155 நவநாதம் 1998: நாவலப்பிட்டி-குயீன்ஸ்பரி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

இரா.ராஜகோபால் (நிர்வாக ஆசிரியர்), க. பொன்னுத்துரை (மலராசிரியர்), கனகசபாபதி நாகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). நாவலப்பிட்டி: மலர் வெளியீட்டுக் குழு, ஸ்ரீ தேவசேனாபதி சுவாமி ஆலயம், குயின்ஸ்பரி, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 13: லட்சுமி

12440 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1991.

மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1991. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார்