இ.விஜயேந்திரன் (இயற்பெயர்: இ.இராஜேஸ்வரன்). மல்லாகம்: விஜயா பிரசுரம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). 54 பக்கம், விலை: ரூபா: 1.25, அளவு: 18×12 சமீ. ஆசிரியரின் முதலாவது நாவல். மதுவுக்கு அடிமையான ஒரு பள்ளி ஆசிரியரின் மகளான மைதிலியையும் அவளது கணவனான இராணுவ அதிகாரியான சுந்தரத்தையும் சுற்றி வளர்த்துச் செல்லப்படும் கதை. பிரிவு, அவள், கடிதங்கள், காதற் புறாக்கள், எண்ணத்தில் வீழ்ந்த இடி, சுந்தரம், உலகம் இருண்டது, ஆறுதல், தம்பி, சோதனை, அம்மா, விசாரணை, விடிவு, புயல் ஓய்ந்தது ஆகிய 14 இயல்களில் இந்நாவல் விரிந்துள்ளது.