குகனேந்திரன். யாழ்ப்பாணம்: நிலாமலர் பதிப்பகம், காங்கேசன்துறை சாலை, கொக்குவில், 1வது பதிப்பு, ஆவணி 2001. (யாழ்ப்பாணம்: ஷாமளி அச்சகம்). (6), 168 பக்கம், விலை: ரூபா 95.00, அளவு: 18.5×12 சமீ. தமிழக ஜனரஞ்சகப் பாணியில் விறுவிறுப்பாக எழுதப்பெற்ற ஆசிரியரின் இரண்டாவது நாவல். பாடசாலை மாணவி வித்யா கனவில் தான் கண்ட ஒரு இளைஞனுக்காகக் காத்திருக்கிறாள். தோழியருடன் நயினாதீவுக்கு கடல் மார்க்கமாகச் சென்றவேளை நயினாதீவு இறங்குதுறை மீண்டும் கனவில் வந்த அவ்விளைஞனை நினைவூட்டுகின்றது. அங்கு சந்திக்கும் ஒரு சாமியார் “ஒரு இளைஞன் உன்னைத் தேடிவந்து கைப்பிடித்து வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் பாக்கியம் உனக்குண்டு” என்கிறார். வித்யாவும் அந்தக் கனவுக்காதலனைத் தேடியபடியே வாழ்கிறாள். இடையில் வித்தியா காதலித்துக் காதல் கைகூடாமல் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளம் காதல் ஜோடியொன்றின் பழங்கதையொன்றையும் கேள்விப்படுகின்றாள். இதே வேளை லண்டனில் பிறந்து வளர்ந்த தீபனும் அதே மாதிரியானதொரு கனவுடன் வாழ்கின்றான். ஓவியனான அவன் கனவில் வந்த பெண்ணையும் அதே கனவில் தான் கண்ட கோவிலொன்றின் சுற்றாடல் காட்சிகளின் பின்னணியில் வரைந்து வைத்திருக்கிறான். அந்த ஓவியத்துடன் தனது கனவுக் காதலியைச் சந்திக்கவென இலங்கையில் உரும்பிராயில் வசிக்கும் தன் பெரியம்மாவிடம் வருகின்றான். அங்கு தற்செயலாக தான் கனவில் கண்ட வித்தியாவையே சந்திக்கிறான். வித்யாவும் தன் கனவுக்காதலன் அவனே எனக்கண்டு அதிசயிக்கிறாள். இறுதியில் இறந்த அந்த பாரதி-பரதன் சோடியே மீண்டும் மறுபிறவியில் தீபன்- வித்தியா ஜோடியாக இணைவதாக கதை சுவாரஸ்யமாகச் சொல்லப்படுகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 068773).
12831 – சங்க காலம் முதல் சமகாலம் வரை: சி.மௌனகுருவுடனான நாடகம் தவிர்ந்த நேர்காணல்.
செ.யோகராஜா. மட்டக்களப்பு: மகுடம் வெளியீடு, இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 124 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: