14744 உயிர்வாசம் (நாவல்).

தாமரைச் செல்வி (இயற்பெயர்: ரதிதேவி கந்தசாமி). பரந்தன்: சுப்ரம் பிரசுராலயம், இல. 77 , குமரபுரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 369, கே.கே. எஸ். வீதி). xviii, 550 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×13.5 சமீ. தற்போது அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றிருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவில், அரசிடத்திலும் ஊடகங்களிடத்திலும் பிரதான பேசுபொருளாகவிருந்த படகு மக்களைப் (Boat People) பற்றிய புதினத்தை உயிர் வாசம் என்ற பெயரில் எழுதியிருக்கிறார். இலங்கையில் நீடித்தபோரையடுத்து, வாழ்வா சாவா என்று உயிரைக் கையில் பிடித்தவாறு வாழ்ந்த மக்கள், அங்கிருந்து தப்பி எங்காவது சென்றுவிடத்துடித்தமை தொடர்பான வலிநிரம்பிய கதை உயிர்வாசம். எதிர்காலம் குறித்த கனவுகளை சுமந்தவாறு அவுஸ்திரேலியாவுக்கு உயிரைப் பணயம் வைத்து கடல்மார்க்கமாக படகுகளில் வந்தவர்கள் நடுக்கடலில் எதிர்கொண்ட உயிர்ப் போராட்டத்தையும், கரை ஒதுங்கிய பின்னரும் சுமந்த வலிகள் பற்றியும், புகலிடத்தின் வாழ்வுக்கோலத்தையும் உயிர்வாசம் நாவல் சுமார் 540 பக்கத்தில் சொல்கிறது. இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனில் பிறந்திருக்கும் தாமரைச்செல்வி, 1973 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள், நாவல்கள் எழுதிவருகிறார். இதுவரையில் 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளும் மூன்று குறுநாவல்களும், ஆறு நாவல்களும் எழுதியுள்ளார். இவரது சில சிறுகதைகள் குறும்படங்களாகவும் வெளியாகியுள்ளன. தமிழக பிரபல திரைப்பட இயக்குநர் “முள்ளும் மலரும்” மகேந்திரனும் போர்க்காலத்தில் வன்னியில் நின்ற சமயத்தில், தாமரைச்செல்வியின் சில கதைகளை குறுந்திரைப்படமாக்கியுள்ளார். தாமரைச்செல்வி, எழுதத் தொடங்கிய காலம் முதல், வடபுலத்தில் குறிப்பாக வன்னிப் பிரதேச வயலும் வயல் சார்ந்த மாந்தர்கள் குறித்த புனைவுகளை எழுதிவந்திருப்பவர்.

ஏனைய பதிவுகள்

14480 தமிழ் மொழிப் பிரயோகம்: கணக்கெடுப்பும் பிரச்சினைகளும்: ஆய்வரங்கக் கட்டுரைகள்-1996.

எஸ்.எதிர்மன்னசிங்கம் (வெளியீட்டாளர்). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம்). viii, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: