14748 ஊற்றை மறந்த நதிகள்(சமூக நாவல்).

சுலைமா சமி இக்பால். மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (மாவனல்ல: எம்.ஜே.எம். பிரின்டர்ஸ், 119, பிரதான வீதி). xvi, 108 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955- 1825-04-1. ஈழத்தின் முஸ்லிம் பெண் படைப்பாளிகளுள் ஒருவரான சுலைமா சமி இக்பாலின் முதலாவது சமூக நாவல் இதுவாகும். தென் இந்திய ஓர்கீஸ் சஞ்சிகையும், மல்லாரி பதிப்பகமும் இணைந்து அனைத்துலக ரீதியில் நடத்திய முகம்மது இஸ்மாயில் இப்ராஹீம் பீவி நினைவு நாவல் போட்டியில் ஆறுதல் பரிசுபெற்ற நாவல் இது. வஞ்சகமறியாத ஆயிஷா டீச்சரையும் இரண்டாம் தாரத்திற்கு ஆசைப்பட்டு குடும்பத்தைச் சீரழித்து இறுதியில் அவரது காலடியில் ஊனமுற்றவராக வந்து தஞ்சமடையும் ஆயிஷா டீச்சரின் கணவனையும் சுற்றிக் கதை நிகழ்கின்றது. 17 அத்தியாயங்களில் வளர்த்துச் செல்லப்படும் இந்நாவல் தர்க்காநகர், பாணந்துறை, களுத்துறை போன்ற பிரதேசங்களுக்குரிய பேச்சுமொழியில் எழுதப்பட்டுள்ளது. நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் கதாமாந்தர்களாக ஆயிஷா டீச்சரும், அன்சாரும், அபுல் ஹஸன் மாஸ்டரும், கதீஜாவும், பஸ்லியா, நிரோஷா போன்ற அனைத்துப் பாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளனர். ஊற்றை மறந்துவிடும் நதியைப்போன்று நன்றி மறந்த மனிதர்களைப்பற்றிய கதை இது. இக்கதையில் உலவும் கதாமாந்தர்கள் செய்யும் துரோகம், பொறாமையால், அன்புடன் இணைந்து வாழும் ஒரு தம்பதியினரைப் பிரிக்கும் ஈனச் செயல், நன்றி மறக்கும் நயவஞ்சகம் போன்ற இழிகுணம் கொண்ட மனிதர்களுக்கு அல்லாஹ்வே தண்டனையும் கொடுப்பதாக கதை நகர்கின்றது. இந்நூலாசிரியர் 2008இல் இன நல்லுறவு ஒன்றியத்தினால் கலாஜோதி விருது வழங்கப்பட்டு கௌரவம்பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

12008 – நாவலரியல்: ஆறுமுக நாவலரினதும் ஆறுமுக நாவலர் பற்றியதுமான வெளியீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்விபரப் பட்டியல்.

இ.கிருஷ்ணகுமார், ஆ.சிவநேசச்செல்வன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு, 1979. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 32 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 நாவலரியல் நூற்கண்காட்சிக்

14215 தெய்வீக பாடல்கள்.

பொன். வல்லிபுரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிஷன், மருதானை). 114 பக்கம், விலை: ரூபா 50.00,

Prezzo più basso Robaxin 500 mg

Prezzo più basso Robaxin 500 mg Comprare il Robaxin 500 mg di marca online È la prescrizione quando si acquista Robaxin 500 mg online in