14750 என்றும் ஒளிரும் விளக்கு.

திக்குவல்லை கமால். பண்டாரகமை: பரீதா (Fareedha) பிரசுரம், 104, அத்துலுகம, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). (9), 10-98 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955- 7301-00-6. தென்னிலங்கை திக்குவல்லையைச் சேர்ந்த முகம்மது கமால் எனும் இயற் பெயருடைய திக்குவல்லை கமால் எழுதியுள்ள எட்டாவது நாவல் இதுவாகும். வறுமை காரணமாகத் தன் வாழ்வை ஒரு வகையில் தியாகம் செய்யும் ஒரு இளம்பெண்ணுக்கு அதுவே ஒரு சவாலாகவும் மாறி விடுகின்றது. அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவளது துணிச்சலையும் இந்நாவல் பேசுகின்றது. தென்னிலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்வதிலும் அம்மக்களின் தனித்துவமான சில பண்புகளை அடையாளப் படுத்துவதிலும் திக்குவல்லை கமாலின் நாவல் சிறப்பிடம் பெறுகின்றது. கதை நிகழ்களத்தின் கலாச்சாரம், மண் வாசனை, பேச்சு வழக்கு இப்படி அனைத்துமே இந்நாவலுக்குக் கைகொடுக்கின்றன. தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் இந்நாவல் வெளியிடப்பட்டுள்ளது. பன்முக படைப்பாற்றல் கொண்ட நூலாசிரியர் நீண்டகால இலக்கியப் பரிச்சயம் கொண்டவர். இவரது நாவல்கள் பத்திரிகைகளில் தொடர்கதைகளாகவும் வெளிவந்துள்ளன. உயர்கல்விப் பீடங்களில் பட்டப்படிப்பின் பரீட்சைத் தேவைகளுக்காக ஆய்வு செய்யப்பட்டுமுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65534).

ஏனைய பதிவுகள்