14751 என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை (நாவல்).

அமிர்தா ராஜகோபால். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை: ஸ்கிரிப்ட் ஆப்செட்). vi, 306 பக்கம், விலை: இலங்கை ரூபா 500., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955- 44754-0-3. இக்கதையின் நாயகனுக்கு வரும் காதலால் அவன் எவ்வாறு திசைமாறிப் போகின்றான் என்பதே இந்நாவலின் போக்காகும். தமிழக கதாசிரியர்களின் கதைசொல்லும் பாணியை பெருமளவில் பின்பற்றிய எழுத்துநடை இவருடையது. அமிர்தா ராஜகோபால் (1968.02.11) கொழும்பில் பிறந்தவர். இவரது தந்தை அல்லிமுத்து தாய் ராஜேஷ்வரி. கொழும்பு பம்பலப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை, போகாதே என் சகியே ஆகிய இரு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் “வாங்க பேசலாம்” என்னும் மாத இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய வடிவில் வெளிவந்துள்ளன. இலங்கைப் பத்திரிகையான தினகரனிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஆடை வடிவமைப்பு தொழிலில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார் எழுத்தாளர் அமிர்தா ராஜகோபால்.

ஏனைய பதிவுகள்

Mobi Dixon, Mrnationthingz

Artikkelit Parhaat kasinobonukset: suomi casinos paikka Kuluttajakokemus Turbonino-uhkapelilaitos Nämä kaksi aluetta näkyvät suodatusvaihtoehdoissa molemmissa Kindle-e-asiakkaissa ja voit Kindle-sovelluksissa hallita Applen ipad/ios- ja Android-laitteita. Omat oppaasi