14752 ஒரு கூடும் இரு முட்டைகளும்.

கெக்கிராவ ஸஹானா. கெக்கிறாவ: கெக்கிராவ ஸஹானா, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ் லிமிட்டெட்). 94 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-51679-0-1. இந்நூலில் ஒருகூடும் இரு முட்டைகளும் என்ற குறுநாவலும், 1990களில் மல்லிகை இதழ்களில் வெளியான புருஷோத்தமன், உண்மைக் காதல் என்பது, உள்ளும் புறமும் பேய்கள், பெண் என்றால், அகதிகள் ஆகிய ஐந்து சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. சிறுகதைகள் பெரும்பாலும் பெண்-பெண்மை, மென்மை, தாய்மை, அவளது மனோவியல்புகள் அவளது உடம்பு ஆகியவை ஒரு சந்தர்ப்பத்தில் அவளுக்கே எதிரியாகி விடுகின்றமையை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு கூடும் இரு முட்டைகளும் என்ற குறுநாவலில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம்மளவில் சுயாதீனமானவர்கள் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகின்றார். பெற்றோரின் குணாதிசயங்கள் அனைத்தும் பிள்ளைகளுக்கு சமமாக வாய்ப்பதில்லை என்பதும், ஓரு பிள்ளையிடம் காணப்படும் நல்லியல்பு மற்றொரு சகோதரத்திடம் காணப்படுவதில்லை என்பதும் எமது சமூகத்தினரால் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு தவறான உயர்வு தாழ்வுச் சிக்கல்களை ஏற்படுத்துவதை ஆசிரியர் அறவே வெறுப்பதை இந்நாவலின் வாயிலாகச் சொல்லியிருக்கிறார். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளின் இரு வேறுபட்ட உணர்வுகளுக்கு சமவளவில் முக்கியத்துவம் கொடுக்கவும், மனிதனின் போலி வேஷத்திலும் முகமூடியிலும் மயங்காது, அவனது உண்மைக் குணத்தை கண்டறிய முயலும் வண்ணம் அறிவுறுத்துகின்றார். இந்நாவல் புளியங்குளம் கிராமத்தின் வாழ்வியல் பண்புகளின் பின்னணியில் வளர்க்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54193).

ஏனைய பதிவுகள்

12528 – ஈழம்-மட்டக்களப்பு மாநிலத்தில் தொன்றுதொட்டு வழக்கில் இருந்துவரும் வசந்தன ; கூத்து:

ஒரு நோக்கு. ஈழத்துப் பூராடனார், அன்புமணி இரா.நாகலிங்கம், க. தங்கேஸ்வரி, மு.நடேசானந்தம் (தொகுப்பாசிரியர்கள்). கனடா: ஜீவா பதிப்பகம், 1109 Bay Street, Toronto, Ontario M5S 2B3, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கனடா:

14795 மர்மப் பெண்: திகில் சித்திரம்.

கே.எஸ்.ஆனந்தன். (இயற்பெயர்: கார்த்திகேசு சச்சிதானந்தம்). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட்).

12218 – எமது கலாசார பாரம்பரியம்: இரண்டாம் தொகுதி.

ஆனந்த W.P.குருகே (பதிப்பாசிரியர்), எஸ்.நடராஜ ஐயர் (மொழிபெயர்ப்பும் தொகுப்பும்). கொழும்பு: பிரதிப் பணிப்பாளர் நாயகம், மத்திய கலாசார நிதியம், கலாசார மத விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 1997. (மகரகம: தரஞ்ஜீ பிரின்ற்ஸ், 506,

14636 பார்வைகள் (கவிதைத் தொகுதி).

அபீர்ராஜன் (இயற்பெயர்: அன்ரனி பீற்றர்). யாழ்ப்பாணம்: அபீர்ராஜன், 36, சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). viii, 84 பக்கம், விலை:

12245 – இலங்கை மத்திய வங்கி: பொருளாதார நிலை 1997.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு: இலங்கை மத்திய வங்கி அச்சகம்). (6), 89

14835 உரைநடைச் சிலம்பு (பரல்-உ).

தொகுப்பாசிரியர் குழு. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, மாசி 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 94 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 20.5×13.5 சமீ. இலக்கியம், வரலாறு, சங்கீதம்,