14753 ஒரு துளி நிழல். இ.தியாகலிங்கம்.

சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி). 168 பக்கம், விலை: இந்திய ரூபா 160., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-81322- 22-2. ஓர் ஈழப்பெண்ணின் நாள்காட்டா நாட்குறிப்புகளிலே இந்நாவல் சூல்கொண்டுள்ளது. ஆயுதம் கொடுக்கும் பலமும், நிராயுதபாணியாய் நிற்கும் பலவீனமும் ஈழத்தமிழர் கடந்துவந்த பாதையாகும். ஈழவிடுதலை ஈன்றெடுத்த வேதனை, அழிவு, அரசியல் வியாபாரம், பொதுச் சொத்துக்களைப் போட்டிக்குப் பதுக்குதல், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிப் பாராமுகமாய் இருந்துகொண்டு கோடம்பாக்கத்தை நோக்கி அலையும் புலம்பெயர்ந்த பினாமிகளின் கூட்டம், பதுக்கிய சொத்துக்காய் பரிமாறப்படும் துப்பாக்கி வேட்டுக்கள் எனத் தொடரும் ஈழத்தமிழரின் அவலவாழ்வின் ஒரு குறுக்குவெட்டு முகத்தோற்றமே இந்நாவல். ஈழப்போராட்டத்தில் வாழத்துடித்த ஒவ்வொரு உயிரும் எத்தனை தீமிதிப்புகளைத் தாண்டி வந்தார்கள்? சோதனைகளையே வாழ்க்கையாக்கிக் கொண்டார்கள்? ஈழத்தில் தமிழ்ப்பெண்ணாய் பிறந்து வேதனை மட்டுமே வாழ்க்கை என்கிற விரக்தியின் விளிம்பிற்குப் போனவளுக்கு ஒரு கைவிளக்கை கொடுத்து அவளுக்கு ஒரு துளி நிழலைக்கொடுத்த திருப்தியுடன் ஆசிரியர் கதையை நிறைவுசெய்துள்ளார். இ.தியாகலிங்கம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ட பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் செய்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்