14756 கலாபன் கதை (நாவல்).

தேவகாந்தன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (8), 9-199 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93- 88631-45-7. கலாபன் என்னும் மனிதனின் பதினோராண்டுக் கால வாழ்க்கையே இந்நாவல். குடும்பச் சூழலோடு தொடங்கி கரையில் கடலின் ஏக்கத்திலும், கடலில் கரையின் ஏக்கத்திலும் தொடரும் பயணம், கடலோடிகளுக்கு வரம் அருளும் முகவர்கள், கொண்டாட்டமும் ஏக்கமும் நிறைந்த கடல் வாழ்வு, மரண பயத்தைத் தரும் “கடல் நோய்மைகள்”, தீராததும் கட்டறுந்ததுமான காமம், உறவுகளின் முகம் தேடும் காத்திருப்பு, நாளையின் எதிர்பார்ப்புக்கள், நிலங்களும் காலநிலைகளும் அறிமுகப்படுத்தும் பல்வேறு மனிதர்கள் என கலாபனின் வாழ்வு பற்றிய உள்ளார்ந்த மடிப்புகளுடன் விரிவுகொள்கின்றது இந்த மீகாமனின் நாவல். கடல் அள்ளியும் கொடுக்கின்றது, பரிதவிக்கவும் விடுகின்றது. மனித வாழ்வைப் பரிகசிக்கிறது. பெரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் உருவாக்கு கின்றது. நெருக்கமானவர்களிடமிருந்து பிரித்து வைக்கின்றது. பின் அதுவே இரக்கங்கொண்டு சேர்த்தும் வைக்கிறது. மீண்டும் சந்நதம் கொண்டு தாயங்களை உருட்டி விளையாடிப் பகடி செய்கின்றது. கப்பல், மனிதர்கள், கடல் பிரதேசங்கள், காலநிலைகள், தரும் குளிர்ச்சி, வறண்ட காற்று, மாறும் நிலம், போக்குவரத்தின் நுட்பங்கள், போன்றவற்றோடு புனைவின் உத்திகளும் நிறைந்த சீரான மொழியைக் கைப்பற்றியிருக்கிறார் தேவகாந்தன். நாவலின் சில அத்தியாயங்கள் சிறுகதைகளாக வாசிக்கப்படக்கூடிய செறிவையும் கொண்டிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65554).

ஏனைய பதிவுகள்

MCW Casino Bangladesh – Experience The Best Casino

Содержимое MCW Casino Bangladesh: Registration Bonuses Available MCW Casino Bangladesh: Bonus Eligibility Requirements MCW Casino Bangladesh: App-Based Gaming Advantages MCW Casino Bangladesh: Mega Casino World