14758 காகிதப் படகு (குறுநாவல்கள்).

மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 130 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-88-6. மலரன்னை எழுதிய உயிர்த்துளி, காகிதப்படகு, காலத்திரை ஆகிய மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இது. ஒரு குடும்பப் பெண் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ குழந்தைப்பேறு எவ்வளவு முக்கியமானதொன்று என்பதை “உயிர்துளி” வலியுறுத்துகின்றது. கணவனது துணையில்லாமல் வாழும் ஒரு பெண், கையில் குழந்தையுடன் இச்சமூகத்தில் தனியொருத்தியாக நின்று எத்தகைய இன்னல்களை அனுபவிக்கவேண்டியுள்ளது என்பதை “காகிதப்படகு” விபரிக்கிறது. ஒரு குடும்பத்தில் மனைவியின் முக்கியத்துவத்தையும் இறப்பினால் அவளைப் பிரியும்போது குடும்பத்தினரிடையே ஏற்படும் உளத்தாக்கத்தையும், உயிருடன் இருக்கும் மகளைப் பிரிந்து வாழும்போது ஏக்கத்தினால் மனம் சோர்ந்து வாடும் ஒரு தந்தையின் உணர்வுகளை “காலத்திரை” பிரதிபலிக்கின்றது. ஜீவநதி வெளியீட்டகத்தின் 114ஆவது பிரசுரமாக இக்குறுநாவல் தொகுதி வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Content Как Играть В Авиатор Бесплатно Как Обойти Блокировку «пин Ап» Когда Вышел Слот Aviator? Как Играть В Игру Aviator На Деньги? Как Зарегистрироваться В

12166 – பிள்ளையார் துதியும் ஒளவையார் மதியும்.

வீ.வ.நம்பி (இயற்பெயர்: வீ.வ.நல்லதம்பி). கனடா: கனடா இந்து மாமன்றம், 1வது பதிப்பு, ஜுலை 1999. (கனடா: ரோயல் கிராப்பிக் நிறுவனம்). vi, 102 பக்கம், விலை: கனேடிய டாலர் 2., அளவு: 21×13.5 சமீ.

14249 நறுக்கென்று-மூன்று விரல் கேள்விகள்: சமூக சுயவிமரிசனப் பத்திகள் .

ஜெயந்தன் (இயற்பெயர்: செபஸ்தியாம்பிள்ளை போல் ஜெயந்தன் பச்சேக் அமதி). மன்னார்: விக்ரறீஸ் மீடியா, பேசாலை, 1வது பதிப்பு, புரட்டாதி 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xxiv, 92 பக்கம், விலை:

12943 – நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்: வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.

மு.வி.ஆசீர்வாதம். யாழ்ப்பாணம்: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழா ஞாபக ஏடு, மு.வி.ஆசீர்வாதம், 49, கண்டி வீதி, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). 12 பக்கம், விலை: 75 சதம், அளவு: