இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Tyristubbveien 77, 0687 Oslo, 1வது பதிப்பு செப்டெம்பர் 2016. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 253 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1- 326-80433-6. காதலே மூச்சு என்கின்ற கற்பனையில் மிதக்கும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு அந்தக் காதலே பொய், அவன் அல்லது அவள் காதலித்தவர் பொய்யின் உருவம் என்பது தெரிகிறபோது அவர்கள் மனதில் தோன்றும் உணர்வுகளுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தாண்டியும் சொற்களைக் கொண்டுவர முடியாது. காதல் போதை. அதுவே தோல்வி அடையும்போது அவனைத் தற்கொலை செய்யத் துண்டும் காலனின் பாசக்கயிறாகிறது. காதல் வயப்படாதவனுக்கு இவன் ஏன் தற்கொலை செய்தான் என்றிருக்கும். அந்தப் போதையில் அகப்பட்டவனுக்கு இனி வாழ்ந்தென்ன பயன் என்றிருக்கும். பலர் காதல் கைகூடாத போது ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதற்கு இந்தக் கதாநாயகனோடு பயணிக்கும்போது ஓரளவு புரிதல் உண்டாகும். அதற்காக அதுவே வழியென்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. காதலின் காயத்திற்கும் காலம் மருந்து தரும். காதல், ஏமாற்று, துரோகம், கோபம், துக்கம், இயலாமை, அதீத நம்பிக்கை என்கின்ற உணர்ச்சிகளில் கொந்தளித்து, தனது வாழ்வை அழித்துக் கொண்ட ஒருவனை இந்த நாவலில் நீங்கள் பார்க்கலாம்.
Spilleren Associates
Content Spilleren Local casino Premijos Spilleren Casino 900 Euro Additional And you can Helpful Site You’ll fifty 100 percent free Revolves Fraud Alive Agent Casino