14760 காலங்கள் மாறும்.

கே.எஸ்.ஆனந்தன். (இயற்பெயர்: கார்த்திகேசு சச்சிதானந்தம்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 4: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). ii, 202 பக்கம், விலை: இந்திய ரூபா 45.00, அளவு: 18.5×12.5 சமீ. முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகையின் வார இதழில் தொடர்கதையாகப் பிரசுரமான சமூக நாவல் இது. திருமணமான இளவயதில் பொறுப்புணர்வு கெட்ட கணவனான சத்தியமூர்த்தியைக் கைவிட்டு, ஒரே மகனான ரகுவரனையும் சத்தியமூர்த்தியிடமே விட்டுத் தன் முன்னாள் காதலன் மாசிலாமணியுடன் ஊரைவிட்டு ஓடிச்சென்று குடும்பத்திலும் சமூகத்திலும் அவப்பெயரைச் சம்பாதித்த சந்திரஞானத்தின் வாழ்வின் பின்னணியில் கதையின் ஒரு பகுதி நகர்ந்து செல்கின்றது. மறு தளத்தில், மகன் ரகுவரன், சமரசிங்க என்ற சிங்களவரிடம் வளர்ப்பு மகனாக வளரும் பின்னணியில் கதை நகர்த்தப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேர்ந்து உயர்பணியில் ரகு அமர்வதும், சிந்துவுடன் காதல்வசப்படுவதும், தாயின் பின்னணியை இறுதியில் ரகுவரன் அறியவருவதும் மற்றொரு தளத்தில் கதையை வளர்த்துச் செல்கின்றது. தன்னை சமரசிங்க என்ற தனது தந்தையின் சிங்கள நண்பரிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை இளவயதிலேயே அநாதையாக வாழ வைத்துவிட்டு, தமிழகத்துக்குச் சென்று விட்ட தந்தையைப் பற்றி இறுதியில் தெரிந்துகொள்வதும், இறுதியில் ரகுவரன்- சிந்து திருமண வைபவத்தினை மாசிலாமணி-சந்திரஞானம் இணைந்து நடத்திவைப்பதும், அருண்மொழி தன் தங்கை என்பதை அறிந்து தான் இனி அநாதையில்லை என்று ரகுவரன் மகிழ்வெய்துவதும் எனப் பல்வேறு சமூகச் சிக்கல்களுடன் இந்நாவல் பயணிக்கின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018626).

ஏனைய பதிவுகள்

Best Free Slots

Content Bonus Up To 1,000: the mega moolah slot machine Online Slots Real Money Faqs Why Play Mobile Casino Slots? And it is convenient for