14762 குட்டி.

யோ.பெனடிக்ற் பாலன். கொழும்பு 12: எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 230, மெசஞ்சர் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1963. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 88 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 19×13 சமீ. பருவத் தவறால் பெற்ற மகனைத் தம்பி முறையிட்டு வளர்க்கும் ஒரு தாயின் கதையே இக் குறுநாவலாகும். சமூகத்தில் அவள் எதிர்கொள்ளும் சவால்கள், சோதனைகள் என்பன கதையை வளர்த்துச் செல்கின்றன. யோ. பெனடிக்ற் பாலன், (1939 – 1997) முற்போக்கு இலக்கியப் பேரியக்கத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு, எழுத்துத்துறையில் தன் 19ஆவது வயதில் காலடி பதித்து, இளவயதில் (23வயதில்) எழுதிய குறுநாவல் இது. இவர் பின்னாளில் கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்று உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக” என்ற சிறுகதைத் தொகுதிக்கு 1995 இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவரது “நீயொரு பெக்கோ” என்ற நாடகம் நன்கறியப்பட்டதாகும். இவர் கல்வி உளவியல் அடிப்படைகள் போன்ற கல்வியியல் சார் நூல்களையும் எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்