ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). 217 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7654-01-0. இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிஞர் ஆ.மு.சி.வேலழகன், மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைச் சேர்ந்தவர். 1960ம் ஆண்டு முதல் எழுதிவருவதுடன், 18 நூல்களுக்கு மேல் படைத்துள்ள பன்னூலாசிரியரான இவரது நாவலாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவரது “மூங்கில் காடு” நூலினை தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் சோ.இளங்கோ அவர்கள் ஆய்வுசெய்து M.Phil பட்டம் பெற்றுள்ளார். பேராசிரியர் திரு. இரா. கோவிந்தன் அவர்கள் இவரது நூலான “சில்லிக்கொடி ஆற்றங்கரை” நாவலினை தமிழ்நாடு தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து ஆ.Phடை பட்டம் பெற்றுள்ளார். இதுபோல் இவருடைய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளை முறையே மூவர் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் M.A. பட்டத்திற்கென ஆய்வு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.