14764 கொலம்பசின் வரைபடங்கள்.

யோ.கர்ணன். சென்னை 600024: வடலி வெளியீடு, F-1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், 8A, அழகிரி நகர் 4வது குறுக்குத் தெரு, லட்சுமிபுரம், வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 72 பக்கம், விலை: இந்திய ரூபா 55.00, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0- 9919755-3-2. “தேவதைகளின் தீட்டுத் துணி”, “சேகுவேரா இருந்த வீடு” ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளிவரும் யோ.கர்ணனின் மூன்றாவது நூல் இந்நாவலாகும். இறுதிகட்ட போரின் இறுதிகட்ட நிமிடங்களை தன்னுடைய சுயவாழ்க்கைப் பதிவுகளாகச் சொல்கிறார். தான் தேடிவந்த நாட்டை கொலம்பஸ் மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். ஆனால், ஈழத் தமிழ் மக்கள் பலரால் அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. அதனை குறிப்பால் உணர்த்துகிறார் ஆசிரியர். எத்திசையென்று இன்றி மரணம் விதியாக நின்ற யுத்த நிலத்திலிருந்து பொருளாதார பலம், அதிகார பலம், உடற் பலம் இன்ன பிற வலிமையுடன் தப்பிச் செல்ல முடிகிறவர்கள் மற்றும் அத்தகையை வலிமைகளுள் அடங்கா தவர்களது தப்ப முனையும் முடிவறியாப் பயணத்தை இந்நாவல் விபரிக்கிறது. கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட இவ் அனுபவங்களை அச் சூழலிலிருந்து வந்தவரான ஒரு கதைசொல்லியின் மூலம் இந்நாவல் பதிவுசெய்கின்றது. மக்களை வெளியேறவிடாமல் இலங்கை ராணுவம் ஒரு பக்கமும், புலிகள் அமைப்பு இன்னொரு பக்கமுமாக துப்பாக்கி மூலமாக தடுத்த காட்சிகள் இந்நூலில் விரிகின்றன. கொலம்பஸ{க்கு இருந்தது ஒரு சவால். கடலுக்கு மட்டுமே வரைபடம் வரைய வேண்டியிருந்தது. ஈழத்தமிழருக்கோ இரண்டு சவால்கள். கடற்பயணங்கள் புறப்படுவதற்காக கடற்கரைகளைச் சென்றடைவதற்கும் வரைபடங்கள் வரைய வேண்டியிருந்தது. முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போரின் இறுதிக் காட்சிகளின் யதார்த்தத்தை உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கின்றது. புலிகள் அமைப்பின் அரசியல் துறைக்கும் புலனாய்வு துறைக்குமான இடைவெளியை அம்பலப் படுத்துகிறது. தாக்குதல் அணிப் போராளிகளுக்கும் அரசியல் போராளிகளுக்கும் இருந்த இடைவெளியையும் சொல்கிறது. “மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தத்தினாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டிருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது” என இதனை யோ.கர்ணன் விபரிக்கிறார். இந்த நிலைக்கு முன்னதாக இறுதி கட்டத்தில் நடந்த கலங்கவைக்கும் நிகழ்வுகளை மனக்கண் முன் கொண்டுவருகிறார். இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளியானவர். போரில் ஒரு காலை இழந்தவர்.

ஏனைய பதிவுகள்

Apollo Rising Slots

Posts Apollo Ascending Condition Of Igt Lay – Spinson mobile casino android Find the the fresh Likes of 1’s Gods To your Video game Apollo