14766 சாதிகள் இல்லையடி பாப்பா (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2019. (சென்னை: சிவம்ஸ்). 124 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12 சமீ. வேம்பும் வெண்ணிலாவும் ஒரே கல்லூரியில் ஆய்வு வரை கற்றவர்கள். வேம்பு தனிக் கல்லூரி ஆரம்பிக்கிறார். வெண்ணிலா தாயாரின் முதுமை காரணமாக அவரது மறைவின் பின்னர் வேம்புவுடன் இணைகின்றார். இருவரும் புரட்சிக் கோட்பாட்டுடன் கல்லூரியை விரிவாக்குகின்றனர். வெண்ணிலாவும் இன்றைய குடும்ப அமைப்பை உடைப்பதில் ஆர்வம் காட்டுகின்றார். கல்லூரி விடுதியிலும் பாலியல் வேற்றுமை காட்டாது விடுதி அறைகள் ஒதுக்குவதையும் மாணவியர் ஏற்றனர். வாடகை பாதியாகக் குறைவதையும் கல்லூரிப் பாடங்களில் உதவி பெறும் வாய்ப்பையும் பெற அவர்கள் விரும்பினர். நாவலில் புற வாய்ப்பாக வளரும் சீவகன், ஆடுகள் முழு பாலியல் சுதந்திரம் பெற்றதாகக் கூறுவார். மனித இனம் குறிப்பாக சிறையுள் பெண்ணை வைத்துள்ளது. சொத்து வாரிசுக்கே வீட்டு அடிமைச் சாதியாக, கழுத்தில் மஞ்சள் கயிறு, கால் விரலில் மெட்டிகள் என்பார் வெண்ணிலா. கதாபாத்திரங்களிடையே வளர்க்கப்படும் மார்க்சியப் பார்வையுடனான உரையாடல்களின் வழியாக நாவல் நகர்த்தப்படுகின்றது. இந்நாவல் போன்றே, செ.கணேசலிங்கனின் முன்னைய பல நாவல்களிலும் பெண்விடுதலை மற்றும் பெண்ணியச் சிந்தனைகளை மிக ஆழமாகவும் தெளிவாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஓரு பெண்ணின் கதை, ஒரு குடும்பத்தின் கதை, இரண்டாவது சாதி, நீ ஓரு பெண், கவர்ச்சிக் கலையின் மறுபக்கம், குடும்பச் சிறையில், நான்கு சுவர்களுக்குள், புதிய சந்தையில், நரகமும் சொர்க்கமும் ஆகிய நாவல்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பன்முகப்பட்ட அழுத்தங்கள், பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். கலை, இலக்கியங்கள் மயக்க மூட்டும் மதுவாக்கப்படக் கூடாது. கலை, இலக்கியங்கள் மூலம் நல்ல உயர்ந்த கருத்துகளை மனதில் பதிய வைக்கலாம். புறநிலைப் பண்ட உற்பத்திகள் எவ்வாறு விஞ்ஞான ரீதியாக வளர்க்கப்படுகிறதோ, அதே போல அகநிலை உற்பத்தியான கலை, இலக்கியங்களும் விஞ்ஞான ரீதியாக, மனித சமுதாயத்தை மாற்றி அமைக்கக் கூடிய உந்து சக்தியாக வளர்க்கப்பட வேண்டும்.” என கலை இலக்கிய வளர்ச்சி குறித்து செ. கணேசலிங்கன் தமது சிந்தனையை பதிவு செய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்