14768 சேற்றின் நடுவில்.

கற்பகன் தம்பிராஜா (மூலம்), தம்பிராஜா ஈஸ்வரராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு: கற்பகம் பிரசுரம், 2A, கிராமோதய மாவத்தை இராஜகிரிய, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). xi, 39 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 17×12 சமீ. 1974ஆம் ஆண்டு அமரர் கற்பகன் தம்பிராஜா அவர்களால் எழுதப்பட்ட இந்நாவல் 1999 இல் அவரது குடும்பத்தினரால் நூலுருவாக்கப்பட்டுள்ளது. அமரர் கற்பகன் தம்பிராஜா ஆசிரிய சேவையில் நீண்டகாலம் ஈடுபட்டவர். பணிக்காலத்திலும், ஓய்வூதியம் பெற்ற வேளையிலும் பல்வேறு கட்டுரைகள், நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள் என எழுதிவந்தவர். அவரது வாழ்நாட்காலத்தில் இவை நூலுருவாகும் வாய்ப்பினைப் பெற்றிருக்கவில்லை. 1974இல் எழுதப்பட்ட இக்குறுநாவலே அவரது முதலாவது நூலாக வெளிவந்துள்ளது. கற்பகன் தம்பிராஜா ஆசிரியர் 1970 களில் கூத்துக்கலையை மாணவர்கள் மத்தியில் பரப்ப அர்ப்பணிப்போடு பாடுபட்ட ஒரு கூத்துக் கலைஞர் ஆவர். அவர் 1970களில் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் தயாரித்த பவளக்கொடி, குருக்கேத்திரன் போர் ஆகிய இரண்டு கூத்துக்களும் முக்கியமானவை (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21050).

ஏனைய பதிவுகள்

Millionaire Brillanter kopf Haupttreffer

Content Casinodaddy Presents The Best And Newest Verbunden Casinos And Slots Break Da Sitzbank Again Durchgang Mobile Echtgeldspiele Je Smartphones & Tablets How Being A

14670 பத்தினித் தெய்வம்: சிலப்பதிகார நாடகங்களும் வில்லுப்பாட்டுக்களும்.

சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஜுலை 2016. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). (4), 100 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7973-02-9.