14770 துர்கா.

மொழிவாணன். கொழும்பு 13: நீரஜா பப்ளிக்கேஷன்ஸ், 248/83, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1982. (கொழும்பு: மொடர்ன் பிரின்டர்ஸ்). viii, 100 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 9.90, அளவு: 17.51×2 சமீ. இது ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணனின் ஆறாவது நாவல். தினகரன் வார மஞ்சரியில் தொடராக வெளிவந்தது. இலங்கையின் மாடல் அழகியான குமாரி அஞ்சலாவின் (துர்கா) கவர்ச்சிப் புகைப்படங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. ஒரு பெண் பயங்கரவாதியின் உண்மைக்கதை என்ற விளம்பரத்துடன் வெளிவந்துள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேசத்துப் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தின் பதிவேடுகளில் உள்ள குறிப்புகளின்படி துர்காதேவி 10.10.1933இல் நாஜிபாபாத் கோட்டையில் பிறந்துள்ளதாகவும், சுமார் 700 கொலைகளையும், 699 கொள்ளைகளையும் மேற்கொண்டதாவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மென்மையான உள்ளம் கொண்ட ஒரு பெண் எப்படி கொடுமையான பயங்கரவாதியானாள் என்பதை சுவையுடன் இந்நாவலில் விபரித்துள்ளார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17371).

ஏனைய பதிவுகள்

14822 அசையாத மலைத்தொடர்.

கமல் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

14972 மனப்பால்.

கா.பொ.இரத்தினம். வேலணை: கா.பொ.இரத்தினம், பாராளுமன்ற உறுப்பினர், 1வது பதிப்பு, ஆவணி 1972. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், விலை: 60 சதம், அளவு: 20.5×13.5 சமீ. இலங்கையின் தேசிய