14774 நான் என் அம்மாவின் பிள்ளை (பாகம் 1).

இளையதம்பி தங்கராசா. கனடா: நாவற்குடா இளையதம்பி தங்கராசா, 4000 King Road, King City, Ontario L7 B1K4, 1வது பதிப்பு, 2015. (Canada: A Fast Print, 2703 Eglinton Avenue East). xxvii, 484 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்புப் பிரதேசத்தின் நாவற்குடாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இ.தங்கராசா. இலங்கை மத்திய வங்கியில் ஆய்வுத்துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றபின்னர் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த இவர் 22.08.2017இல் அங்கு அமரத்துவமடைந்தவர். இந்நாவலில் கிழக்கிலங்கை மக்களின் பண்பாட்டு மரபுகள் மிக நுட்பமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல், பொருளாதாரம், பண்பாடு, மொழி வழக்கு, இலக்கியம், கலைகள், தொழில்முறைகள், சமூக அமைப்பு எனப் பல செய்திகளைப் பதிவுசெய்துள்ளார். இலங்கையில் பிறந்த அகத்தியன் என்னும் இளைஞன் இனப்பிரச்சினை காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி கப்பலில் பயணம் செய்து, அமெரிக்கத் துறைமுகம் ஒன்றில் அகதியாக இறங்குகின்றான். பத்தி என்ற பெயருடன் கப்பலில் பணிசெய்த பணியாளன் ஒருவன் அந்த நேரத்தில் இறந்துவிட, அவன் பெயரில் அமெரிக்காவில் நுழைந்து கல்வி கற்று, அணுசக்தி குறித்த பேரறிவு பெற்ற அறிவியலாளனாக, அமெரிக்காவின் சொத்தாக உயர்வு பெறுகின்றான். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து, தாயக நினைவுடன் இலங்கை வந்து, தம் மட்டக்களப்பு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பல வகை முயற்சிகளைச் செய்வதும், தாயகத்தில் தாம் திருமணம் செய்துகொள்வதுடன் தம்மைச் சார்ந்தவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து, அனைவருடன் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் நிகழ்வுகளும்தான் புதினத்தின் கதைக்களமாகும்.

ஏனைய பதிவுகள்

14454 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: வகையீடு.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). viii, 57

12875 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 3 (1985/1986).

வி.ரவிச்சந்திரன், செல்வி எஸ்.திருமணிச்செல்வி (இதழ்ஆசிரியர்கள்), ளு.வு.டீ. இராஜேஸ்வரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி). (16),

14182 ஆறுமுகப் பாலன் இவன் ஆற்றங்கரை வேலன்.

வ.ஆ.அதிரூபசிங்கம். வல்வெட்டித்துறை: வ.ஆ.அதிரூபசிங்கம், அம்மன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). x, 81 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14664 பூவரசம்பூ.

மகாகவி அல்லாமா இக்பால் (உருது மூலம்), வ.அ.இராசரத்தினம் (தமிழாக்கம்). மூதூர்: தங்கம் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1977. (மூதூர்: அமுதா அச்சகம்). 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ. மகாகவி

12867 – இலங்கையினதும் உலகத்தினதும் மூலாதாரச் சரித்திர நூல்.

L.H.ஹொஹஸ் பெறேறா, ஆ.இரத்தினசபாபதி (ஆங்கில மூலம்), B.M.யோசவ் பொன்ராசா, M.J.வேதநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு: W.M.A.வாஹிட் அன் பிரதர்ஸ், 233, பெரிய தெரு, 1வது பதிப்பு, 1955. (கொழும்பு: கூட்டுறவு மொத்த விற்பனவு அச்சக நிலையம்,

14602 சாமரையில் மொழிகலந்து: கவிதைத் தொகுதி.

அன்புடீன் (இயற்பெயர்: பீ.எம். கலந்தர் லெவ்வை). அக்கரைப்பற்று: பாலம் கலை இலக்கிய பேரவை, ஏ.ஜே. கொம்ப்ளெக்ஸ், பிரதான பாதை, 1வது பதிப்பு, ஜனவரி, 2002. (அக்கரைப்பற்று-01: செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட் ). xvi, 116