இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo,1வது பதிப்பு மே 2019. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 61 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0-244- 48250-3. இந்நூல் “நெருஞ்சி முள்ளு” என்ற குறுநாவலையும், உதயம், முகமூடிகள் என்ற இரு சிறுகதைகளையும் கொண்டுள்ளது. குறுநாவல், றிக்ஸ் ஹொஸ்பிட்டல், சுகந்தி, மீண்டும் சந்திப்பு, சுபமுகூர்த்தம், உணவகத்தில், காலநதியில், காதலாகி, மீண்டும், மாறாத மனிதர்கள் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன.
15041 விசேட செய்தி அறிக்கையிடல்.
ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர், இல. 891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2020. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). xviii, 176, (16) பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள்,