14779 நேசவினை (சமூக நாவல்).

ஹிதாயத்துல்லாஹ் மீர்சா. நிந்தவூர் 07: மிர்சா வெளியீட்டகம், 105, தபாலக வீதி, 1வது பதிப்பு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (கல்முனை 13: அந்-நூர் ஓப்செட், அலியார் வீதி). xiv, 162 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52414-2-7. கதை நாயகன் தாஹீரின் தியாகத்தையும்அவனுடைய மூத்த வாப்பாவின் பாசப் பிணைப்பையும் இந்நாவல் உணர்வுபூர்வமாக விபரிக்கின்றது. ஏழையாகப் பிறந்த தாஹிரின் கஷ்டங்களுக்கு மத்தியிலான படிப்படியான வளர்ச்சிகள் கதையை நகர்த்திச் செல்கின்றன. கதாநாயகனின் வறுமைநிலை, அவன் வளர்க்கப்பட்ட விதம், படிப்பில் அவனுக்கு ஏற்பட்ட வெறுப்பும் ஈர்ப்பும், அவனுடைய எதிர் பார்ப்புகளும் அவன் விரும்பிய காதல் வாழ்க்கையும் பொய்மையால் மெய்மையை வாழவைத்த ஆள்மாறாட்ட நாடகமும் என இவையெல்லாம் இணைந்து வாசகர்களை கதையுடன் ஒன்றிக்க வைக்கின்றன.

ஏனைய பதிவுகள்