14781 பணிக்கர் பேத்தி.

ஸர்மிளா ஸெய்யித். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600077: மணி ஓப்செட்). 104 பக்கம், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93- 86820-83-9. சகர்வான் அலிமுகம்மது சக்கரியாவிற்கு தான் அலிமுகம்மது என்பவரின் மகள் என்பதை விட, சக்கரியா என்பவரது மனைவி என்பதை விட தான் பணிக்கரின் பேத்தியென்பதில் தான் எத்தனை பெரிய கௌரவம்? துயர்களை சிரித்துக்கொண்டே வலிமையுடன் கடக்கின்ற ஒரு பெண்ணாக சகர்வான் நாவல் முழுவதும் வலம் வருகிறார். சகர்வான், தன்னை யானையைக் கட்டி மேய்த்த பணிக்கரின் பேத்தி என்று சொல்லிக் கொள்கிறாள். அது பொய்யோ புனைவோ அல்ல. தன்னை உதாசீனம் செய்த கணவனை உதறிவிட்டு தன் உழைப்பின்மூலம் குடும்பத்தைப் பேணுகிறாள், செல்வத்தை திரட்டுகிறாள். ஆண்களிடையே சரிசமமாக நின்று போராடி தன்னை நிறுவுகிறாள். தாத்தா பணிக்கரின் யானை உயிருள்ள விலங்கு. பேத்தி சகர்வானின் யானை உருவமற்றது. அதற்குப் பல பெயர்கள். உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை. இலங்கையின் சிறுபான்மையினமான ஏறாவூர் முஸ்லிம் மக்களின் கலை, கலாசாரம், வாழ்வியல், அரசியல், அவர்கள் எதிர்நோக்கிய சமூகப் பிரச்சனைகள் எனப் பலவற்றைப் பேசிச் செல்லும் சிறந்த படைப்பாக “உம்மத்” நாவல் மூலம் வாசகர்களை ஈர்த்த ஸர்மிளா ஸெய்யித் எழுதிய இரண்டாவது நாவல் பணிக்கர் பேத்தி. 852ஆவது காலச்சுவடு வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்