14789 புள்ளிகள் கரைந்த பொழுது (நாவல்).

ஆதிலட்சுமி சிவகுமார். சென்னை 600078: கலைமாறன் வெளியீட்டகம், தோழமை பதிப்பகம், எண் 10, 6ஆவது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், 1வது பதிப்பு, மே 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 272 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93- 80369-68-6. ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவக்குமார் அவர்களின் இந்நாவல், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய மனிதப் பேரவலத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லுகின்றது. இந்த நாவலில் எங்கள் மண்ணில் நடந்த பேரவலத்தை கற்பனையோ, கனவுகளோ, புனைவுகளோ இன்றி, தான் கண்ணால் கண்ட காட்சிகளையும், காதால் கேட்டதையும,; கூடவே இருந்து அனுபவித்து உணர்ந்ததையும், உள்ளதை உள்ளபடி தோலுரித்துக் காட்டியிருக்கின்றார். நாவலுக்கே உரித்தான இலக்கியப் பண்பில் இருந்து வழுவாமல், ஓர் உண்மைச் சம்பவத்தைப் பிரச்சாரப் போக்கின்றி, நாவலுக்குரிய உருவப்பண்பையும் மீறாமல், அழகியல் உணர்வையும் மீறாமல், இலக்கியத்துக்குரிய தன்மையோடும், அதே நேரத்தில் மண்வாசனையும் யாதார்த்தப் பண்பும் குன்றாமல், மிக அழகுறப் படைத்திருக்கின்றார். இதில் செல்வராசு என்கின்ற பாத்திரம் பிரதான பாத்திரமாக வருகின்றது. கூடவே அவரது மனைவி இரண்டு பிள்ளைகள், அயல்வீட்டு சுந்தரமண்ணை குடும்பம், இடம்பெயர்ந்து செல்லும்போது புதிதாக அவர்களுடன் இணையும் சுகியும் கைக்குழந்தையும், அப்படியே கொஞ்சத்தூரம் போக தனிமனிதனாக இணையும் பரமேசு என்கின்ற பாத்திரம், தேவிபுரத்திலிருந்து இவர்களோடு இணையும் முருகேசு அண்ணர் குடும்பம் என இந்தக் கதையில் பல பாத்திரங்கள் இணைந்து பயணிக்கின்றன. அந்தக்காலத்தின் கோலத்தை எடுத்துக்காட்டும், பதிவிட்டுக் காட்டும், உண்மைகளைத் தொகுத்துச் சொல்லும் வரலாற்று ஆவணத்துக்குரிய தகைமைகளையும் இந்த நாவல் கொண்டிருக்கின்றது. கடந்த 37 ஆண்டுகளாக ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் தொடர்ந்து பயணிக்கும் ஓர் இலக்கியப் படைப்பாளி ஆதிலட்சுமி. பெண் விடுதலை, பெண்ணியம் சார்ந்த தெளிவு, சமூக விடுதலை, இன விடுதலை, சமூக விழிப்புணர்வு, சமூக அக்கறை, எனப் பல்வேறு பரிமாணங்களில் இவரது ஆளுமை மிக்க படைப்புக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு “புயலை எதிர்க்கும் பூக்கள்” சிறுகதைத் தொகுதி, 2000 ஆம் ஆண்டு “என் கவிதை” கவிதைத் தொகுப்பு, 2006 ஆம் ஆண்டு “மனிதர்கள்” சிறுகதைத் தொகுப்பு என இவரது படைப்புகள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. இவரது நான்காவது படைப்பாக இந்நாவல் வெளிவந்திருக்கின்றது. புலிகளின் குரல் வானொலி தொடங்கிய காலத்தில் இருந்து இறுதிக் காலம் வரை கண்ணம்மா என்ற புனைபெயர் மூலம் பல்வேறு வகையான படைப்புக்களால் மக்கள் மனங்களில் தனக்கென்றோர் இடத்தைப் பிடித்துக்கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

Finest No deposit Slots 2023

Content No deposit 100 percent free Revolves Vs Put Totally free Spins No-deposit Free Wagers Small print Is actually twenty-five Totally free Revolves Gambling enterprises

14179 அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கீர்த்தனங்களும் தோத்திரப் பாமாலையும்.

தொகுப்பாளர் விபரமில்லை. அளவெட்டி: கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம், 4வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 1915, 2வது பதிப்பு, 1948, 3வது பதிப்பு, 1975. (கொழும்பு 2: கிரபிக் ஆட் பிரின்ட், 57, வெலோன்ஸ்

12911 – மக்கள் நேசன் கார்த்திகேசன் மாஸ்டர்.

வீ.சின்னத்தம்பி. வட்டுக்கோட்டை: வீ. சின்னத்தம்பி, வட்டு மேற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (யாழ்ப்பாணம்: அருண் பிறின்டேர்ஸ்). 60 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 35., அளவு: 20 x 14 சமீ. இலங்கை