14791 போரும் அமைதியும் (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை: சிவம்ஸ்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12 சமீ. தேசிய யுத்த நெருக்கடி காலம். கொழும்பு மாநகரில் அச்சக வேலை தேடிய சுப்பிரமணி நான்கு ஆண்டுகள் வரை அங்கு பணியாற்றி விட்டு, திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். போலிசில் மாட்டுப் பட்டாரா, போரில் கொல்லப்பட்டாரா, சிறையில் வாடுகின்றாரா என யாவரும் கவலையோடு பேசிக்கொண்டனர். திடீரென நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில் ஒரு வெள்ளையினப் பெண்ணுடன் அச்சகத்திற்கு நன்றி கூற, சுப்பிரமணி வந்தார். அங்கு தான் ஜெர்மனுக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, தன் நாடுகடந்த பயணம் பற்றி விபரமாகக் கூறினார். இடையே அன்னி, தன் காதலியைப் பற்றியும் சொன்னார். யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைச் சார்ந்து அவரது முன்னைய ஆசிரியர் முருகேசன் வாத்தியார் கவலைப்படவில்லை. பகவத்கீதையில் போராளிகளின் உடலே அழிந்தது ஆத்மா அழிவதில்லை. வானத்தில் சுற்றும். மீண்டும் போரில் சேர்ந்து வெற்றி தரும் என விளக்கியிருந்ததாகத் தெரிவிக்கிறார். இலங்கையில் தங்கிய வேளை அண்ணனைப் போரில் இழந்த தன் பழைய காதலி சிவகாமியைப் பார்த்து ஆறுதல் கூறுவதோடு அவளுக்கு உதவுவதாகவும் உறுதி கூறுகின்றார். மற்றொரு தோழி மலர்விழியையும் பார்த்து ஜேர்மன் திரும்புகின்றான். பின்னர் தாயையும் இழந்துவிட்ட தன் பழைய காதலி சிவகாமியை ஜெர்மனிக்கு வரவழைக்கிறான். ஜெர்மனியில் அண்மையில் வாழ்ந்த தமிழர் சிறு அரங்கில் சிவகாமியும் பங்கேற்கிறாள். ஷேக்ஸ்பியரின் வெனிஸ் வர்த்தகன் நாடகத்தில் சைலக என்ற யூதர் எதிர்ப்புப் பிரச்சாரமே ஹிட்லர் இரண்டாவது உலக யுத்தத்தில் 60 லட்சம் யூதர்களைக் கொலைசெய்யத் தூண்டியது என்பது மட்டுமல்ல, ஐன்ஸ்டீன் என்ற யூத அறிஞர் மூலம் அணுவைப் பிளக்கும் விஞ்ஞானத்தையும் அமெரிக்க ஜனாதிபதி பெற்றுக்கொள்ள முடிந்தது. ஜெர்மனோடு இணைந்து போரிட்ட ஜப்பானின் ஹீரொஷிமா, நாகசாக்கி அணுகுணடால் அழிந்துபோகவும் இதுவே காரணமாகியது என்ற வாதத்தை அங்கு முன்வைக்கிறான். இவ்வாறு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடன் இந்நாவல் நகர்த்திச் செல்லப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்