14794 மர்ம மாளிகை.

அருள் செல்வநாயகம். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி 160, 1வது பதிப்பு, ஜுன் 1973. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). (4), 243 பக்கம், விலை: ரூபா 2.90, அளவு: 18×12 சமீ. மர்ம மாளிகையொன்றில் கோடீஸ்வரர் ஒருவர் கொலைசெய்யப்படுகிறார். அதையடுத்துப் பல விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் அங்கு இடம்பெறுகின்றன. துப்பறியும் நிபுணர் ராஜா கொலையைத் துப்பறிந்து கொலையாளியைக் கண்டறிகின்றார். அருள் செல்வநாயகம் (06.06.1926 – 02.09.1973) வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள் எனப்பலவற்றை எழுதிய ஈழத்து பிரபல எழுத்தாளராவார். இவரது முதற் சிறுகதையான “விதியின் கொடுமை” 1946 இல் மின்னொளி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. திருவருட் செல்வம், ரி.டி.எஸ். வழிகாட்டி, குருசெல்வம், செல்வா, ரி. டி. செல்வநாயகம், குபேரன் ஆகிய புனைபெயர்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டுள்ளன. நுவரெலியா அக்கரைப் பத்தனையில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது “பசுமலைப் பார்பதி” என்னும் கதையை எழுதி வெளியிட்டார். இவர் 20க்கும் அதிகமான நூல்களை படைத்துள்ளார். “சீர்பாத குல வரலாறு” என்னும் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது. சென்னை சாகித்திய அகடமி வெளியிட்ட கலைக்களஞ்சியத்திலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 28048).

ஏனைய பதிவுகள்