14795 மர்மப் பெண்: திகில் சித்திரம்.

கே.எஸ்.ஆனந்தன். (இயற்பெயர்: கார்த்திகேசு சச்சிதானந்தம்). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட்). (2), 126 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.90, அளவு: 18×12 சமீ. ஈழத்தின் மர்ம நாவல் மற்றும் துப்பறியும் நாவல் பாரம்பரியம் பற்றி ஆய்வுசெய்யப்புகும் எவருக்கும் ஜனமித்திரன் வெளியீடுகள் தவிர்க்கமுடியாதவை. விறுவிறுப்பான மர்மநாவலாக வளர்த்துச் செல்லப்படும் மர்மப் பெண் என்ற திகில் சித்திரத்தின் அத்தியாயத் தலைப்புகளே சுவாரஸ்யமானவை. எலும்புக்கூடு நகர்ந்தது, பிணம் பேசியது, ஆவி உலகம், மாயத்தீ, மோகினிப் பேய், கீதாவின் குரல், அறையில் கண்ட அதிசயம், கதவைத்தட்டிய கை, சுருளி வந்தான், டாக்டர் மனிதனா, நாய்கள் ஓலமிட்டன, நிர்வாணப் பெண், மர்ம மரணம், கீதாவின் குழப்பம், கீதாவின் மூளை குழம்பியது, உயிர்ப் பரீட்சை, பசியைக் கொன்ற பாதகி, மாயக் குளிகைகள், காதல் மயக்கம், பாழடைந்த மண்டபம், பயங்கர டாக்டர், அசுர உருவம், மர்ம நிழல், அழுகிய அழகி கொலை, டாக்டரின் டயறி ஆகிய 25 அத்தியாயங்களில் இந்நாவல் விறுவிறுப்பாக நகர்த்திச்செல்லப்படுகின்றது. யாழ்ப்பாணம், இணுவிலில் பிறந்த கா.சச்சிதானந்தம் அவர்கள் கே.எஸ்.ஆனந்தன் எனும் புனை பெயரில் ஈழத்து இலக்கிய துறையில் அறியப்பட்டவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018639).

ஏனைய பதிவுகள்