அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2011, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). x, 66 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-0700-01-1. தென்னிலங்கையின் என்டெரமுல்லை- வெலப்பிரதேசத்தில் ‘நாக்கியா” என்ற போராளிக் கிழவனைக் கதாபாத்திரமாகக் கொண்டு இலங்கையின் இனப் பிரச்சினையை புதியதொரு கோணத்தில் அலசும் நாவல். தீவிரவாத சிந்தனை கொண்ட இளைஞர்களை அடக்க முனையும் பொலிஸ் கெடுபிடிகள் நாவலை வளர்த்துச் செல்கின்றன. சிங்களப் பிரதேசத்தினைக் கதைக்களமாகக் கொண்டதால் உரையாடல்களில் சிங்கள மொழி கலந்து காணப்பட்ட போதிலும், ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அவ்வத்தியாயத்தில் பயன்படுத்தப்பட்ட சிங்கள சொற்பிரயோகங்களின் தமிழாக்கமும் காணப்படுகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் மகாகவி, சி.சிவசேகரம், இ.சிவானந்தன், சன்மார்க்கா, இ.முருகையன், இ.அனுரதன், க.தணிகாசலம், இப்னு அஸ{மத், எஸ்.ஆர்.நிஸாம் ஆகியோரின் கவிவரிகள் இடம்பெற்றுள்ளன.