நா.யோகேந்திரநாதன். கிளிநொச்சி: சூரிய மலர்கள் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஜுலை 2019. (யாழ்ப்பாணம்: ரூபன் அச்சகம், ஆனைக்கோட்டை). xvi, 398 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42746-3-1. தமிழீழ விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தில் எமது மக்களின் அளவிடப் படமுடியாத இழப்புகளும் போராளிகளின் அர்ப்பணிப்புகளும் கரைந்தோடிய குருதி வரைந்த சுவடுகளில் வெடித்தெழுந்த இலக்கியப் படைப்பு இது. 4×1.5 கி.மீ மட்டுமேயான பரப்பளவைக்கொண்ட ஒரு கடற்கரைப் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மக்களை வந்தடையவிட்டு, முப்படையினரும் குண்டுமழைபொழிந்து பெரும்பாலானவர்களை அழித்தனர். அங்கு இடம்பெயர்ந்த மக்களில் ஒருவராகவிருந்து தப்பிப் பிழைத்தவர் இந்நாவலாசிரியர். தான் கண்டனுபவித்ததை அடுத்த தலைமுறையினருக்குக் காவிச்செல்லவேண்டும் என்ற வரலாற்று விருப்பில் இந்நாவலை படைத்துள்ளார். முன்னதாக இரு பாகங்கள் நீந்திக்கடந்த நெருப்பாறு வெளிவந்துள்ளன. இது அந்த வரலாற்று நாவலிலக்கியத்தின் மற்றுமொரு தொடராகும். புது மாத்தளனிலிருந்து வட்டுவாகல் வரை நகர்ந்த அந்த வலி மிகுந்த நாட்களை ஒரு கண்கண்ட சாட்சியின் வழியாக இந்நாவல் பதிவுசெய்கின்றது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25358).