14799 மறுபடியும் நாங்கள்.

இந்துமகேஷ் (இயற்பெயர்: சின்னையா மகேஸ்வரன்). ஜேர்மனி: சி.மகேஸ்வரன், Volta Str. 51, 2800 Bremen-33, West Germany, 1வது பதிப்பு, ஜனவரி 1987. (கல்லச்சுப் பிரதியாக்கம்). 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. ஐரோப்பிய மண்ணில் தமிழ் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இல்லாத கால கட்டத்தில் ஜேர்மனியின், பிறேமனில் இரு மாதத்துக்கு ஒரு சஞ்சிகையாக பூவரசு சஞ்சிகை 1991 இல் முகிழ்ந்தது. இதன் ஸ்தாபக ஆசிரியராக இந்து மகேஷ் விளங்கினார். புலம்பெயர் மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கி, வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களைக் கொண்டிருந்த “பூவரசு” சஞ்சிகைக்கும் அதன் ஆசிரியர் இந்துமகேசுக்கும் உண்டு. சஞ்சிகையின் மேலதிக செயற்பாடுகளாக ஒவ்வோர் ஆண்டும் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடாத்தப்பட்டு ஆண்டு நிறைவை ஒட்டிய விழா கொண்டப்பட்டு அந்த விழாவில் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டு வந்தன. 2006க்குப் பிற்பட்ட காலங்களில் இணைய வளர்ச்சியின் மேலோங்கலில் பூவரசின் வருகையில் தள்ளாட்டம் ஏற்பட்டது. ஆண்டுக்கு இரு இதழ்களே வெளிவருவதுகூடச் சில காலங்களின்பின்னர் சாத்தியமாகவில்லை. பூவரசின் பின்னணியில் அக்காலகட்டத்தில் நாவல்கள் சிலவும் கையெழுத்துப் (கல்லச்சுப்) பிரதிகளாக வெளிவந்திருந்தன. ‘மறுபடியும் நாங்கள்” அவற்றில் ஒன்றாகும். ஜேர்மன் கலாச்சாரப் பின்னணியையும் எமது தமிழ் கலாச்சாரப் பின்னணியையும் இவரது நாவல் கோடிட்டுக்காட்டுகின்றது. மௌனத்தில் அழுகின்ற மனங்கள், விடியலுக்கில்லை தூரம், நீலவிழிப் பாவைகள் ஆகிய நாவல்களையும் இவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 071191).

ஏனைய பதிவுகள்

12879 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 9 (1992/1993).

க.சிவகரன் (இதழ் ஆசிரியர்), S.T.B. இராஜேஸ்வரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம்). (16), 96 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள்,

14438 தமிழ் உரைநடைத் தொகுப்பு (க.பொ.த. உயர்தரம்).

த.துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G.L. 1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (8), 166 பக்கம், விலை

12482 – தமிழருவி: தமிழ்விழா சிறப்பிதழ்: 1990:

தமிழ் மகா வித்தியாலயம ;, பண்டாரவளை. மலர்க் குழு. பண்டாரவளை: தமிழ் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை). 160 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

12528 – ஈழம்-மட்டக்களப்பு மாநிலத்தில் தொன்றுதொட்டு வழக்கில் இருந்துவரும் வசந்தன ; கூத்து:

ஒரு நோக்கு. ஈழத்துப் பூராடனார், அன்புமணி இரா.நாகலிங்கம், க. தங்கேஸ்வரி, மு.நடேசானந்தம் (தொகுப்பாசிரியர்கள்). கனடா: ஜீவா பதிப்பகம், 1109 Bay Street, Toronto, Ontario M5S 2B3, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கனடா: