இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2018. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 282 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0- 244-40626-4. நாவலின் இரண்டாம் பாகத்தில் “TS” இன் பயணம், வேலை, அந்த மர்மம், பாய்ந்த வேல்கள், பெடியள் வந்தார்கள், புதுமனை, சிவா வந்தான், இந்திய இராணுவம், தொலைபேசிக் கட்டணம், நோஸ்க் வகுப்பு, நீலக் கடவுச் சீட்டு, மாற்றங்கள், விருந்து, “TS” இன் பயணம், மீண்டும் ஒஸ்லோவில், மாற்றங்கள், அந்த நாள் வந்தது, இனி, தாமோதரன் குடும்பத்தின் வருகை, கற்பனைகளோடு, காலவெள்ளத்தின் கட்டுடைப்பில், தாம்பத்தியம், சண்முகன், தீண்டல், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில், சந்திப்பு, விருந்து, ஆகிய 27 அத்தியாயங்கள் விரிந்துள்ளன.