14805 மொழியா வலிகள் பகுதி 3.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2018. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 269 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0- 244-10631-7. நாவலின் மூன்றாம் பாகத்தில் தமிழ், நல்ல மாட்டிற்கு, அருளன் குடும்பம், கடைத் திறப்புவிழா, கப்பல் பயணம், அழியாத் தடங்கள், நிமலனும் குடும்பமாக, சொரூபனுக்கு வந்த சோதனை, றூபனின் புதுவாழ்வு, சொரூபனின் சுந்தரி, தத்தில் தாமோதரன், நிர்மூலமாகிய நிமலன், திசை மாறிய காற்று, இடியாக வந்த செய்தி, ஜனனம், மீன் பாடும் நகரத்தார், புரியாத அந்நியர்கள் ஆகிய 17 அத்தியாயங்கள் விரிந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

12447 – அகில இலங்கைத் தமிழ்மொழித் தினம் ; 1999.

தமிழ்மொழிப் பிரிவு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு அச்சக விபரம் தரப்படவில்லை). (52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ. 1999ஆம் ஆண்டு தமிழ்மொழித்தின

15671 ஆதித்தாய்: சிறுகதைகள்.

தேவகாந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 202 பக்கம், விலை: ரூபா 500.,