14807 யக்கடையாவின் வர்மம்: துப்பறியும் நாவல்.

M.A.அப்பாஸ். கொழும்பு 11: விஸ்டம் ஹவுஸ் (அறிவகம்), இல. 7, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1957. (கொழும்பு 11: ஆவ்ரா அச்சகம், 19, செட்டியார் தெரு). (4), 135 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×13 சமீ. மரதன்கடவல யக்கடயாவின் பிறப்பிடம் பேராதெனியவில் உள்ள குடா இரியாகம வளவ்வையாகும். இவருக்கு ஒரே ஒரு சகோதரி மாத்திரமே இருந்திருக்கிறாள். சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, படிப்படியாக ஒரு கொள்ளைக்காரனாக மாறியவன் யக்கடயா. கெக்கிராவ தபால் நிலைய அதிபரை 1950ம் ஆண்டு சுட்டுக் கொன்ற பின்னர், யக்கடயா பற்றி நாடெங்கிலும் பரவலாக பேசப்பட்டது. இக்கொலைக் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை பெற்று 16 வருட சிறைவாசத்தின் பின்னர் விடுதலை பெற்றான். 111ஆவது வயதில் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் 09.10.2011 இல் மரணமானான். யக்கடையா (இரும்பு மனிதன்) பாக்தாத் திருடன், ரொபின் ஹ_ட் போன்று தான் திருடிய பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வழமையைக் கொண்டவன். யக்கடயா என்பது அவனது வீர தீர செயல்களைப் பார்த்து கிராமத்து மக்கள் வைத்த காரணப் பெயராகும். அவனது உண்மையான பெயர் சாஞ்சி ஆராச்சிகே ஜினதாஸ என்பதாகும். யக்கடயாவை பொலிஸார் நாடெங்கிலும் வலை விரித்து தேட ஆரம்பித்த வேளையில் பொலிஸாரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக வடபகுதிக்கு ரயிலில் சென்று, பருத்தித்துறையில் இருந்து 20 மைல் தூரத்தை நீந்தியே கடந்து இந்திய கரையை அடைந்திருக்கிறான். யக்கடயாவிற்கு நன்றாக தமிழ் பேச முடியும். அதனால் யக்கடயா இந்தியாவில் எவ்வித பிரச்சினையுமின்றி பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறான். 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட யக்கடயா, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அவனுக்கு எதிரான கொலை குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது. 16 ஆண்டுகள் சிறையில் அடைபட்டிருந்த யகடயா பின்னர் நன்னடத்தையில் விடுவிக்கப்பட்டான். அவன் சைவ உணவையே அருந்தியதுடன், தனது வாழ்க்கையில் என்றுமே புகைத்தல், மது அருந்துதல் பழக்கத்திற்கு அடிமையானதே இல்லை என்பர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட எந்தவொரு தகவலும் பலவருடங்களாக எவருக்குமே தெரியவில்லை. யக்கடயா ஒரு கொலை காரனாக இருந்தாலும் அவன் அப்பாவி மக்களை துன்புறுத்தும் பழக்கத்தை கொண்டிருக்கவில்லை. செல்வந்தரிடம் அடித்து பறிக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தான் என்பதால் அவனை ஊர்மக்கள் போற்றி வந்தனர். அவனைப்பற்றிய வீரதிரக்கதைகள் பல கர்ணபரம்பரைக் கதைகளாக ஐம்பதுகளில் உலாவிவந்தன. தனது மரணத்துக்கு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் யக்கடயா சுத்தமான தேசிய வெள்ளை உடை அணிந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளான். யக்கடையாவின் வாழ்வின் முற்பகுதியை தான் கண்டு கேட்ட தகவல்களை வைத்து சுவாரஸ்யமான நாவலாக ஆசிரியர் 1957இல் எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

12910 – செஞ்சொற் செல்வம்: செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களது அகவை ஐம்பது நிறைவையொட்டிய சிறப்பு மலர்.

சிறப்பு மலர்க் குழு. கொழும்பு: அகில இலங்கை இந்து மாமன்றம், 1வது பதிப்பு, மே 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). xvi, 276 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

14917 ஒரு மாமன்னரின் பொற்காலம்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). xvi, 82 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

14746 உள்ளத்தனைய உயர்வு (நாவல்).

ஆ.மு.சி.வேலழகன் (இயற்பெயர்: சி.வேல்முருகு). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 191 பக்கம்,

14158 பருத்தித்துறை கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சித்திரத்தேர் வெள்ளோட்ட சிறப்புமலர் 23.2.2017.

இ.திருமாறக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: தேர்த் திருப்பணிச் சபை, கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பருத்தித்துறை: சிவா ஓப்செட் பிரின்டர்ஸ், வியாபாரிமூலை). xvviiiஇ 33 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

12135 – சிவபூசைத் திரட்டு.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 2வது பதிப்பு, ஆவணி 1926, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×11 சமீ.

12589 – கணிதம் 10ஆம் ஆண்டு.

M.P.M.M.ஷிப்லி (தமிழாக்கம்), ந.வாகீசமூர்த்தி, திருமதி ம.திருநாவுக்கரசு (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 7வது பதிப்பு, 1992, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 13: பசிபிக் அச்சகம், இல. 267, ஆட்டுப்பட்டித் தெரு).