14810 லைலா மஜ்னு.

முஹம்மது ஸெயின். கொழும்ப 14: முஹம்மது ஸெயின், ஸெயின்ஸ்தான் டிரேடிங் கம்பெனி லிமிட்டெட், 703, சிரிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, 1977. (கொழும்பு 3: த டயமண்ட் பிரின்டர்ஸ், 41, செயின் மைக்கல் வீதி). (2), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×12 சமீ. இந்நூலாசிரியர் கண்டி மாவட்டத்தின் தஸ்கஹ என்ற கிராமத்தில் 29.04.1918இல் பிறந்தவர். பிரபல வர்த்தகரான இவர், எழுத்தாளராகவும், சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளரும் ஸெயின்ஸ்தான் படமாளிகையின் உரிமையாளருமாவார். தாருல் இஸ்லாம் பத்திரிகையிலும் உள்;ர் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கும் இவர் இஸ்லாமிய தாரகையின் ஆசிரியருள் ஒருவராகவும் பணியாற்றியவர். பின்னாளில் அப்பத்திரிகையின் உரிமையாளரானார். லைலா மஜ்னு இவரது இலக்கியப் படைப்பாக்கங்களுள் ஒன்றாகும். இந்நூல், லைலா என்பதின் கருத்து நள்ளிரவின் முத்து என்பதாகும், காதலர்கள் செய்துகொண்ட கடும் பிரதிக்கினை, காதலரைப் பிரித்துவைத்த காதகன் இப்னு ஸலாம், பஸரா மீது ஏமனின் யுத்தப் பிரகடனம், சடுதியில் தோன்றிய யுத்த மேகமும் விடுதியினுள் வருந்திய வனிதையும், பஸராவின் படுதோல்வி, அதிகாலையில் மூண்ட அகோர யுத்தமும் மதிகேட்டினால் மாண்ட மன்னர்களும், மஜ்னூனின் வருகை, பிரிந்து கூடிய காதலர்களும் விரைந்து வந்த வினையும் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நாவல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2687).

ஏனைய பதிவுகள்

14194 சிவபுராணம்.

மாணிக்கவாசகர் (மூலம்). யாழ்ப்பாணம்: இந்து மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு 1988. (அச்சக விபரம் தரப்படவில்லை). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. 1988 சிவராத்திரி தினத்தையொட்டி

14441 தமிழ் மொழியும் இலக்கியமும்: தரம் 7 (இன்பத் தமிழ் 2-செயல்நூல்).

சோதிநாயகி பாலசுந்தரம், விக்னேஸ்வரி செல்வநாயகம், வானதி காண்டீபன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39,

14550 திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாண்டு மலர்-ஆனி 1961.

மஹாகவி, பாலேஸ்வரி, ஈழவாணன் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணமலை: திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, ஆனி 1961. (அச்சக விபரம் தரப்படவில்லை). (9), 10-96 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ.

14983 புகழ்பூத்த நீர்வேலி. த.

பரராசசிங்கம். யாழ்ப்பாணம்: காமாட்சி அம்மாள் இந்து பரிபாலன சபை, நீர்வேலி, 2வது பதிப்பு, மார்ச் 2014, 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (யாழ்ப்பாணம்: கணபதி பிரிண்டர்ஸ், திருநெல்வேலி). 396 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,