14810 லைலா மஜ்னு.

முஹம்மது ஸெயின். கொழும்ப 14: முஹம்மது ஸெயின், ஸெயின்ஸ்தான் டிரேடிங் கம்பெனி லிமிட்டெட், 703, சிரிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, 1977. (கொழும்பு 3: த டயமண்ட் பிரின்டர்ஸ், 41, செயின் மைக்கல் வீதி). (2), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×12 சமீ. இந்நூலாசிரியர் கண்டி மாவட்டத்தின் தஸ்கஹ என்ற கிராமத்தில் 29.04.1918இல் பிறந்தவர். பிரபல வர்த்தகரான இவர், எழுத்தாளராகவும், சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளரும் ஸெயின்ஸ்தான் படமாளிகையின் உரிமையாளருமாவார். தாருல் இஸ்லாம் பத்திரிகையிலும் உள்;ர் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கும் இவர் இஸ்லாமிய தாரகையின் ஆசிரியருள் ஒருவராகவும் பணியாற்றியவர். பின்னாளில் அப்பத்திரிகையின் உரிமையாளரானார். லைலா மஜ்னு இவரது இலக்கியப் படைப்பாக்கங்களுள் ஒன்றாகும். இந்நூல், லைலா என்பதின் கருத்து நள்ளிரவின் முத்து என்பதாகும், காதலர்கள் செய்துகொண்ட கடும் பிரதிக்கினை, காதலரைப் பிரித்துவைத்த காதகன் இப்னு ஸலாம், பஸரா மீது ஏமனின் யுத்தப் பிரகடனம், சடுதியில் தோன்றிய யுத்த மேகமும் விடுதியினுள் வருந்திய வனிதையும், பஸராவின் படுதோல்வி, அதிகாலையில் மூண்ட அகோர யுத்தமும் மதிகேட்டினால் மாண்ட மன்னர்களும், மஜ்னூனின் வருகை, பிரிந்து கூடிய காதலர்களும் விரைந்து வந்த வினையும் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நாவல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2687).

ஏனைய பதிவுகள்

12793 – பூதத்தம்பி இசை நாடகம்.

த.கலாமணி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). xii, 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5 x

12457 – உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் பவளவிழா மலர், 1915-1990.

பாடசாலை அபிவிருத்திச் சபை. உரும்பராய்: பாடசாலை அபிவிருத்திச் சபை, உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, 1992. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (30), 91 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18

Baba Nuts Slots

Posts Online Ports Which have Added bonus Cycles Templates Of Free online Slot Game Black Diamond Ports The new Play’N Look online position, which has