14811 வண்டொன்று இரு மலர்கள்(நாவல்).

எம்.சி.ஜெஸீல். கொழும்பு 13: சபிகலா வெளியீடு, 250-BG 3, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1987. (கொழும்பு 13: ஸபீனா அச்சகம், 250-BG 3, ஆட்டுப்பட்டித் தெரு). (8), 67 பக்கம், விலை: ரூபா 58.50, அளவு: 18.5×13 சமீ. கல்ஹின்னையிலிருந்து புறப்பட்டுள்ள இளம் படைப்பாளியின் கன்னி முயற்சியே இங்கு நாவலாகப் பிரசவமாகியுள்ளது. கதாநாயகன் ரமேஷ் நித்யாவை விரும்புகின்றான். அவளும் அவனை விரும்ப இருவரும் அன்புப் பெருக்கில் அணைந்து மகிழ்கின்றார்கள். இடையில் சிலகாலம் பிரிவு ஏற்படுகின்றது. இக்கால இடைவெளியில் ரமேஷ் தன் அத்தை மகள் பொன்னியிடமும் மயங்கு கின்றான். அங்கும் அவர்களிடையே காதல் மலர்கின்றது. நித்யாவின் காதலையும், பொன்னியின் காதலையும் எத்தகைய பேதமுமின்றி நெஞ்சில் வளர்க்கும் ரமேஷ், ஒரு உதாரண புருஷனாக மாறி அன்புக் காதலியர் இருவரையும் மணந்து கொள்கிறான். இல்லற வாழ்வை நல்லறமாக வாழ்வதாக கதை முடிகின்றது. இந்நூலுக்கு சிறப்புரை வழங்கிய எம்.சி.எம்.சுபைர் அவர்கள் ‘இளைஞன் ஜெஸீல் அவரது முதல் நாவலிலேயே இதய நலன் கண்டு வாழ்ந்தால் இப்படியும் வாழலாம் என்று காட்ட முனைந்துள்ளார். சமூகம் என்ன நினைக்கின்றதோ? எப்படி ஏற்றுக்கொள்ளப்போகின்றதோ? எப்படியிருந்தாலும், இளைஞன் ஜெஸீல் உடைய எழுத்துத்துறை எதிர்காலம், அறிவுயர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் வளர வளர ஒளிபெற்றுத் திகழும் அறிகுறி இந்த நாவலில் தென்படுகின்றது” என்று குறிப்பிடுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21629).

ஏனைய பதிவுகள்