14812 வலசைப் பறவைகள்.

சிவ.ஆரூரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 230 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-0958-22-1. எமது சமகாலப் பிரச்சினைகளை மிகத்திறம்பட உணர்த்துவதில் சிவ ஆரூரன் வெற்றிகண்டுள்ளார். நம் இனம் அனுபவித்த, அனுபவித்து வருகின்ற இடர்மிகுந்த வாழ்வை தன் படைப்புகளின் வாயிலாக உயிரோட்டமாகப் படைப்பதில் சிவ.ஆரூரனின் திறன் வியக்கவைக்கின்றது. இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த 1987-1990 காலப்பகுதியில் கதை நிகழ்கின்றது. அக்காலப் போர்ச் சூழல் எவ்வாறு கீழ் மத்தியதர வர்க்க குடும்பங்களில் தாக்கம் செலுத்தியது என்பதை இக்கதை சொல்கின்றது. அருமையான கதை நகர்வும் பாத்திரங்களின் தேர்வும் மொழித் தேர்ச்சியும் அனுபவ வெளிப்பாடுகளும் மிகச்சிறந்த முறையில் கையாளப்படுகின்றன. இலங்கை அரசின் சிறைச்சாலைக்குள்ளிருந்து பூக்கும் சிவ.ஆரூரனின் ஐந்தாவது நூலாகவும், மூன்றாவது தமிழ் நாவலாகவும் வெளிவரும் இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 133ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது. இவரது நாவலொன்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Meci Sloturi De Pokerstars Casino

Content Jocuri Păcănele Playson – Slot banana splash Păcănele Care Plătesc Bine Pe Cazinourile Online Din România Wild Wild West Avantaje Sloturi Online: Distracție Garantată,

15030 வெள்ளி மலை இதழ் 15 (2020).

சுதர்சன் ஜெயலட்சுமி (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: சுன்னாகம் பொது நூலகம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, மார்ச் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, 76