14815 வீட்டுக் கிணறு (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (சென்னை: சிவம்ஸ்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12 சமீ. இலங்கை வரைபடத்தின் தலையாக அமையும் யாழ்ப்பாணம் 1000 சதுர கிலோ மீட்டர் நிலம். 5-7 இலட்சம் மக்களைக் கொண்டது. ஐரோப்பிய கத்தோலிக்கர் ஆட்சியின் பின்னர் புரட்டஸ்தாந்தரும், டச்சுக்காரரும், பிரிட்டிஷ் வெள்ளையரும் ஆண்டனர். இந்தியா 1947-இல் சுதந்திரப் போராட்டத்தில் விடுதலை பெற்றதோடு 1948-இல் இலங்கையும் சுதந்திரம் பெற்றது. பெரும்பான்மை சிங்கள மக்கள் ஆட்சியில் சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிம்கள் ஆட்சி உரிமை வேண்டிப் போராடினார்கள். யாழ்ப்பாணத்திலுள்ளதொரு கிராமத்திலேயே நாவல் மையம் கொள்கின்றது. அங்கு வீட்டுக்கு ஒரு கிணறு, ஊற்று நீரில் பெருமைபெற்றது. கதையின் படி, மணமான அக்கா பரமேஸ்வரி, தங்கை தவமணியின் குடும்பம், கணவர் மலைநாட்டு தேயிலை, ரப்பர் தோட்டத்தில் பணியாற்றி வருபவர், மாதச் சம்பளம் பெறுபவர். இளைய தங்கை தவமணியின் கிணற்றில் இடம்பெற்ற அகால மரணமே நாவலின் திருப்புமுனை. அவர்களின் தோழி வைதேகி, கிணற்று அகால மரணத்தை தன் தோழிசார்ந்து ஆராய்கின்றாள். அவர்கள் வீட்டில் பரமேஸ்வரியின் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்வீட்டுப் பையன் சந்திரன் முதன்மை பெறுகின்றான். செ.கணேசலிங்கன் ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களைத் தந்தவர். நாவல், சிறுகதை ஆகிய ஆக்க இலக்கியத் துறைகளில் மட்டுமல்லாது சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் பெருமளவு எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். குமரன் பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் பெருமளவு தரமான நூல்களைப் பதிப்பித்துள்ளார். 1971இல் குமரன் என்ற மாத இதழை ஆரம்பித்து பொதுவுடமைக் கருத்துக்களுக்கான களமாக அதனை சில ஆண்டுகள் வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Care Este A Adresă Url A Site

Content Cum Preparat Fabrica Un Site Web Si Cân Preparaţie Promoveaza Online Cesta 2 Utilizarea Formularelor Noastre Ş Raport Și Să Revendicaţie Pasul 1: Vizitați

Prelone A Buon Mercato Catania

Migliore farmacia Per ordinare prelone. Acquistare prelone dallEuropa online. VISITA la nostra farmacia online Questo permette loro di ordinare questo prodotto comodamente dal loro cellulare

12992 – இலங்கைத் தொல்பொருளியலளவை ஞாபகவேடு: தொகுதி 5: இலங்கைத் தூபி.

செ.பரணவிதான (ஆங்கில மூலம்), ஞானகலாம்பிகை இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xii, 99 பக்கம், விளக்கப்படங்கள்,