14817 வெண்ணிலா: குறுநாவல்.

வெற்றிச்செல்வி. (இயற்பெயர்: வேலு சந்திரகலா). மன்னார்: வேலு சந்திரகலா, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (மன்னார்: சைபர் சிற்றி, அச்சுக் கலையகம்). 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-41027-2-9. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளியான இந்நாவலின் கதாநாயகனின் முதற் காதல் பற்றிய உண்மை கலந்த கதை. போர்க்காலங்களில் அழகிய இளமை உணர்வுகளை ஒறுத்து விடுதலைப் போருக்காய் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவன் இளங்கோ. அதன் காரணமாக சிறையில் அடைபட்டு சொல்லொணாத சித்திரவதைகளுக்கு ஆளானான். அதன் விளைவாய் பாடுபட்டுப் பொருளீட்ட முடியாத அளவு உடல் உபாதைகளை நாளாந்தம் சுமக்கின்ற உடல், உள நோயாளியாகிவிட்டான். உடலும் மனமும் சமூகமும் பாதுகாப்பும் பொருளாதாரமும் ஒத்துழைக்க மறுக்கின்ற வாழ்க்கையை, சமாளித்து வாழத் தெரியாத ஒருவனாகவே நாடோடி வாழ்க்கை வாழ்கின்றான். அவனுக்குள் இருந்து அவ்வப்போது வழியும் துயரத்தின் கண்ணீரில் அவனது காதலி மஞ்சு கலந்திருக்கிறாள். உறங்காத அவனது முதல் காதல் பற்றி எழுதப்படும் இந்தக் கதைக்குள் எழுதப்படாத பல கதைகளையும் வாசகர்கள் புரிந்துகொள்ள முடிகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான வெற்றிச் செல்வியின் எழுத்தின் சிறப்பு அது.

ஏனைய பதிவுகள்

‎‎gambling establishment Ports Real cash For the Software Store/h1> <