14822 அசையாத மலைத்தொடர்.

கமல் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 280 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-30-6576-6. சிங்கள புனைகதை உலகில், எண்பதுகளில் பிரபல முன்னணிப் படைப்பாளிகளில் ஒருவர் கமல் பெரேரா. சிறுகதை, நாவல், பத்தி எழுத்து போன்ற பல்துறை சார்ந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். இவரது திறந்த கதவு என்ற சிறுகதைத் தொகுதியும் பொன்தாமரைக்குளம் என்ற இளையோர் நாவலும் முன்னர் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இது இவரது மூன்றாவது தமிழ் மொழிபெயர்ப்பு நூலாகும். இந்நாவல், சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளில் சிக்குண்டு அப்பாவிகளாக வாழும் மலைக் கிராமத்தவர்களின் கண்ணீர்க் கதையின் ஒரு வெட்டுமுகத்தை, 1971இல் இடம்பெற்ற இளைஞர் கிளர்ச்சிப் பின்னணியில் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றிபெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

12938 – வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு இரா.சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர்-1993.

சபா.ஜெயராசா, செ.சோதிப் பெருமாள், பொ.கனகசபாபதி. யாழ்ப்பாணம்: செ.சோதிப் பெருமாள், செயலாளர், மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: ஆ.டீ.Pசiவெநசளஇ 14, சிறில் சி. பெரேரா மாவத்தை). (10), 70 பக்கம், விலை:

14003 இலகு தமிழில் HTML.

வே.நவமோகன் (புனைபெயர்: கணினிப்பித்தன்). தெகிவளை: வெப் இன்டர்நெஷனல், இல. 7/3, ரூபன் பீரிஸ் மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்,). 68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100.,

14984 மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்றுச் சுவடுகள்.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), எஸ்.பி.கனகசபாபதி (உதவி ஆசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கனடா: ரீ

12625 – நீரிழிவு வியாதியும் அது பற்றிய சில அனுபவக் குறிப்புகளும்.

மருதூர் ஏ.மஜீத்.சாய்ந்தமருது 3: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436, பழைய சந்தை வீதி,சாய்ந்தமருதூர், கல்முனை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கல்முனை: இளம்பிறைஓப்செற் அச்சகம், மருதமுனை). 55 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு:

12104 – சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் மகரஜோதி தரிசனம்: 26ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-2001.

கே.மோகன்குமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 13: மாஸ்க் அட்வர்டைசிங்

12579 – ஆரம்ப விஞ்ஞானம்: 7-1.

இ.குணநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: திசர அச்சகம், 135, தட்டுகமுனு வீதி, தெகிவளை). vii, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: