ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: நிழல் வெளியீடு, சீவன் பதிப்பகம், இல. 3, 1292, Sherwood Mills Bloved, Mississauga, L5V 1S6, 1வது பதிப்பு, 2007. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், # 3, 1292, Sherwood Mills, Mississauga, Ontario, L5V 1S6). xxviii, 260 பக்கம், விலை: 20 கனேடியன் டொலர், அளவு: 21×14 சமீ. அதிவீரராம பாண்டியர் பிற்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564-1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். வடமொழியிலும், தமிழிலும் தோன்றிய, நளன் கதை கூறும் நூல்களைத் தழுவி “நைடதம்” என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் வெற்றி வேற்கை என்னும் நூலையும், காசி காண்டம், கூர்ம புராணம், மாக புராணம் ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். நைடதம் நூல் பற்றிய ஈழத்துப் பூராடனாரின் இலக்கியக் கண்ணோட்டம் கனடா, டொரன்டோ ஈழநாடு பத்திரிகையில் தொடர்ந்து பிரசுரமானது. அக்கட்டுரைத் தொடரின் நூல்வடிவமே இதுவாகும். நூற்சிறப்பு நோக்கு, நைடதம் என்னும் நூற்படைப்புப் பற்றிய நோக்கு, காவியத்தின் பின்புலக் கண்ணோக்கு, நைடதமென்னும் ஒளடதக் கண்ணோக்கு, மாவிந்த நகரத்தின்கண் ஒரு கண்ணோக்கு, அன்னத்தைக் கண்ணுற்ற படல கண்ணோக்கு, அன்னத்தைத் தூதுவிட்ட படலக் கண்ணோக்கு, கைக்கிளைப் படலத்தில் ஆய்வுக் கண்ணோக்கு, மாலைப் படலம் பற்றிய ஆய்வுக் கண்ணோக்கு, நிலாத் தோற்றுப் படல ஆய்வுக் கண்ணோக்கு, சந்திரோபாலம்பனப் படல ஆய்வுக் கண்ணோக்கு, மன்மத ஆலம்பனப் படலம் பற்றிய ஆய்வுக் கண்ணோக்கு, இந்திரப் படல ஆய்வுக் கண்ணோக்கு, நளன் தூதுப் படலக் கண்ணோக்கு, சுயம்வர படலத்தில் ஒரு ஆய்வுக் கண்ணோக்கு, போர்புரி படல ஆய்வுக் கண்ணோக்கு, மணம்புரி படல ஆய்வுக் கண்ணோக்கு, மீட்சிப் படல ஆய்வுக் கண்ணோக்கு, கலி தோன்று படல ஆய்வுக் கண்ணோக்கு, இளவேனிற் படல ஆய்வுக் கண்ணோக்கு, போதுகொய் படல ஆய்வுக் கண்ணோக்கு, புனல் விளையாட்டுப் படல ஆய்வுக் கண்ணோக்கு, சூதாடு படல ஆய்வுக் கண்ணோக்கு, நகர் நீங்கு படல ஆய்வுக் கண்ணோக்கு, கான் புகு படல ஆய்வுக் கண்ணோக்கு, பிரிவுறு படல ஆய்வுக் கண்ணோக்கு, வேற்றுரு அமைந்த படலம், வீமன் தேடவிட்ட படல ஆய்வுக் கண்ணோக்கு, கலி நீங்கு படல ஆய்வுக் கண்ணோக்கு, தேவியைக் கண்ணுற்ற படலக் கண்ணோக்கு, அரசாட்சிப் படல ஆய்வுக் கண்ணோக்கு, ஆதிக் கிரேக்க இலக்கியங்கள் நாடகங்களின் தமிழாக்க நூல்களின் தகவற் களஞ்சியம், தமிழ் இலக்கிய நூல்களின் ஆய்வுப்பட்டியல் ஆகிய 35 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இறுதி இரு அத்தியாயங்களும் நூலாசிரியரின் பிற நூல்கள் பற்றியவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூ லகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44355).
10 Euro Deposito Casino Gokken met Minimale Betaling 10 iDeal
Volume Website hier: Aantal gestelde vragen 10 eur kosteloos casino’s Hoofdsieraa Bank contact One Casino Tijdens tafelspellen vallen buitenom Blackjac plus Roulette ook Poker, Patienc,