14833 ஈழத்தில் தமிழ்நாவல் இலக்கியம்: சில குறிப்புகள்.

ஆ.சிவநேசச்செல்வன். யாழ்ப்பாணம்: கலைப்பெருமன்ற வெளியீடு, ஏப்ரல் 1973. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. கலைக்கண் இதழில் 23.4.1973 அன்று வெளிவந்த கட்டுரையின் தனி நூல்வடிவம். நூலாசிரியர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தமிழ் விரிவுரை யாளராகப் பணியாற்றிய வேளையில் எழுதிய இக்கட்டுரையில் தமிழ்நாவல் இலக்கியத்தின் இருபதாம் நூற்றாண்டு வளர்ச்சிப் போக்குடன் சமகாலத்தில் எழுச்சிபெற்றிருந்த ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

14629 நெஞ்சுறுத்தும் நிஜங்கள்: கவிதைத் தொகுப்பு.

வயலூரான் (இயற்பெயர்: செல்வராஜா சுதாகரன்). சாவகச்சேரி: செ.சுதாகரன், முத்துமாரி அம்மன் கோவில் வீதி, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (சாவகச்சேரி: திருக்கணித பதிப்பகம்). 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

14078 மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளையின் சிவஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம்.

நா.கதிரைவேற்பிள்ளை (மூலம்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: பருத்தித்துறை நண்பர்கள், கல்வி, சமூக நலன்சார் அமைப்பு, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2017, 1வது பதிப்பு, 1896. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

12296 – கல்வி உளவியல்(பாகம் 1): பிள்ளை வளர்ச்சி.

ச.முத்துலிங்கம். கொழும்பு 3: பேராசிரியர் ச.முத்துலிங்கம், கல்வி உளவியல்துறை, கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1980. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). (4), 204 பக்கம், விலை: ரூபா 30., அளவு: