14835 உரைநடைச் சிலம்பு (பரல்-உ).

தொகுப்பாசிரியர் குழு. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, மாசி 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 94 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 20.5×13.5 சமீ. இலக்கியம், வரலாறு, சங்கீதம், விஞ்ஞானம், கலை, வணிகம் முதலிய துறைகளில் கைதேர்ந்த ஆசிரியர் பலர் எழுதிய கட்டுரைகளின் திரட்டு. இதில் இளங்கோவடிகளும் கம்பரும் (வித்துவான் சி.கணேசையர்), வண்ணமும் வடிவும் (சுவாமி விபுலானந்தர்), உண்மைத் தைரியம் (பெ.நா.அப்புசுவாமி ஐயர்), புனலாட்டு (பண்டிதர் க.சிவசம்பு), தமிழ் வளர்த்த தாமோதரன் (எஸ்.வையாபுரிப் பிள்ளை), நாட்டுப் பாடல்கள் (பண்டிதர் க.சிவசம்பு), மனையறம் நடாத்தும் மாண்பு (வித்துவான் வி.சிவக்கொழுந்து), தமிழ் இசை (இராஜ அரியரத்தினம்), வணிகம் (க.நவரத்தினம்), சேர மன்னன் கடற்படைச் சிறப்பு (பண்டிதர் ச. ஆனந்தர்), வானொலி (அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி வகுப்பு மாணவன்), மெய்ப்புலவன் (பண்டிதர் சோ.இளமுருகனார்), இந்திரனும் கன்னனும் (முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி), ஆற்றுப் படை (பண்டிதர் க.சிவசம்பு), பெண்பாற் புலவர்கள் (பண்டிதர் க.சிவசம்பு) ஆகிய கட்டுரைகளும் உரைக்குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2657).

ஏனைய பதிவுகள்