14838 கலை இலக்கிய கட்டுரைகள்.

எஸ்.மோசேஸ். மட்டக்களப்பு, எஸ்.மோசேஸ், கிருஷி வெளியீடு, 1வது பதிப்பு, 2010. (மட்டக்களப்பு: R.S.T. என்டர்பிரைசஸ்). x, 11-140 பக்கம், விலை: ரூபா 475., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-51403-2-4. இந்நூலில் கலை-இலக்கியம் தொடர்பான 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சங்க காலம் தொடக்கம் சமகாலம் வரையிலான கலை இலக்கிய விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியச் செய்யுள் அமைப்பில் திணைக் கோட்பாடும் திணைப் பகுப்பில் அடங்காத பாடல்களும், சங்க மருவிய காலம் அறநூற் காலமா?, தமிழ் பக்தி இலக்கிய பாரம்பரியத்தில் காரைக்காலம்மையார், இராமாயணம் ஒன்றல்ல பல்வேறு இராமாயணங்கள் தென்னாசியாவில் வழங்குகின்றன, சிலப்பதிகாரம்- செய்யுள் மரபும் பொருள் மரபும், தண்டியலங்காரம் கூறும் காவிய இலக்கணமும் சீவகசிந்தாமணியும், தமிழ்ச் சிறுகதையும் வ.வெ.சு.ஐயரும், கலையை விளங்கிக் கொள்வதெப்படி?, ஓவியத்தில் நவீனத்துவத்தைக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர்கள், நவீனத்துவம் கொணர்ந்த கலை இலக்கியக் கோட்பாடுகள், நவீனத்துவமும் அது ஊடுருவியுள்ள துறைகளும் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12322 – தமிழர் கல்விச் சிந்தனைகள்.

சபா ஜெயராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). vi, 126 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ.,

Super Jackpot Team Slot machine

Content Kann Ich Bei On line Spielhalle Harbors Echtgeld Gewinnen? Gamble Free online Ports In the Luckyland Slots Much more By Triple Sevens: Online casino

16347 கலை வரலாறு: முதலாவது இதழ்(தை-ஆனி 2020).

யோகலிங்கம் நிசாந்தன், ஸ்ரீபன் கிருபாலினி, தாமோதரம்பிள்ளை சனாதனன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கலை வட்டம், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,