ம.ந.கடம்பேசுவரன். தெல்லிப்பளை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (யாழ்ப்பாணம்: வரன் பதிப்பகம், நீராவியடி). vii, 140 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-410 42-1-1. காப்பியதாசன் என்ற பெயரில் ஆசிரியர் எழுதிய 23 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவை, சமூக இசைவு இல்லாத வாழ்வு வாழ்வன்று, பகுத்தறிவும் பண்பாடும், நக்குண்டார் நா இழப்பாரா நா காப்பாரா?, மருந்தும் விருந்தும்- எது உயர்ந்தது?, விருந்து ஏன்-அதனை விடலாமோ?, பூவையர் பூச்சூடலாமா?, சமூக வாழ்வின் இசைவாக்கத்திற்கு இல்லறத்தானின் விருந்துக்குச் சிறப்புப் பங்குண்டு, இன்சொல்லோடு வழங்கும் உபசாரம் நிகரற்றது, மூன்றாவது மனிதனாக்கும் அந்நிய உணர்வுகள், முதியோரைக் காத்து உதவுவது மட்டுமே உலகப் பொது வாழ்வைச் சாத்தியமாக்கும், எமது முந்தையரின் சம்பிரதாயங்கள் பலவும் மற்றவர்களை உள்ளன்புக்கு ஆளாக்குபவையே, பேருந்தில் மங்கையைப் பின்தொடர்ந்த வாலிபனை நெறிப்படுத்திய வள்ளுவநெறி, ஆடவனை அவன் மார்பின் பூணூல் அடையாளம் காட்டியது- சங்கடத்தான் படலையடியில் இருந்தவருக்கு விருந்தும் கிடைத்தது, ஒருவன் கற்றதைத் தனக்குத் துணையாக்குவானாயின் சுற்றம் அவனுக்குத் தானாகவே ஓடிவந்து துணை தரும், இலகுவாகக் கையாளவும் நெடுநாள் பேணவும் முடிவதால் தகவல் சேகரிப்பில் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன, ஆன்மீக வாழ்வும் ஆரோக்கியமும், அன்பாகி அருளான ஆதிமூலமே அன்னை, வாழிய முருகே, சுக்ரீவன் நன்றி மறந்ததேன், மொழியும் கலைத்துறைகளும், அரங்க விதானிப்புக்குக் காண்மியமாகக் கோல் இடம்பெறுமா? ஓரங்க நாடகமும் நாடகமாடுதலும், தமிழர் திருநாள் மகத்துவம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.