14840 கேண்மை.

ஐயாத்துரை சாந்தன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,665,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 160 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-9143-7. பல்வேறு இலக்கியவாதிகளுடனான பரிச்சயங்கள் பற்றி எழுந்த எழுத்துக்களின் தொகுப்பு இந்நூல். இந்த உறவுகள் வெவ்வேறு விதமானவை. நேரடித் தொடர்பின்றி, நூல்வழித் தொடர்புடன் ஏற்பட்ட அறிமுகங்களும், ஒரு பொழுது சந்திப்புகளும், கலந்துரையாடல்களில் ஈடுபட்டவேளை இடம்பெற்ற சந்திப்புக்கள் எனப் பல்வேறு நட்புவட்டத்தினர் பற்றிய சித்திரிப்புக்களே இவை. யாழ்ப்பாணத்தின் தத்துப் புத்திரன், வரதர் நினைவுகள், அசோகமித்திரன், A.A.H.K. கோரி அவர்களுடன் ஒரு சந்திப்பு, சின்னுவ-அச்சிபே, திரு.சோ.சிவபாதசுந்தரம் அவர்களுடன் ஒரு சந்திப்பு, ஒரு முன்னோடியின் மௌனம், ஒரு கவிஞனும் ஒரு தொழிற்சங்கவாதியும், ஒரு “தேவதை”, ஓய்வெடுக்கின்ற உளி ஒன்று, மலையாள மண்வாசனை, ருஷ்ய மொழியில் இலங்கைச் சிறுகதைகள், எதிர்பாராமல் சந்தித்தோம், இலக்கிய ராஜாக்கள், மகாகவி தராஸ் ஷெவ்சேன்கோ, எழுத்தை நம்பியே வாழ்ந்தவர், வித்தாலி / புர்ணீகா, சோவியத்தில் தமிழாய்வு, ஆன் ரணசிங்க, அன்ரனி என்றொரு புனிதன், “வலை”, ஜான்-மாறிகுஸ்தாவ் லே கிளேசியா, A.A.H.K.கோரி, எஸ். பொ.நினைவுகள், சிமமண்டா என்கொசி அடிச்சி, மிஹாயில் ஷோலக்கவ், மேதைமையின் எளிமை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 28 ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65500).

ஏனைய பதிவுகள்