14842 சமூகவெளி: தரிசனங்களும் பதிவுகளும்.

மு.அநாதரட்சகன் (இயற்பெயர்: முருகேசு இராஜநாயகம்). யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xviii, 90 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676- 28-2. அநாதரட்சகன் “நிமிர்வு” என்ற சிறுகதைத் தொகுதி மூலமும், பல்வேறு சஞ்சிகைகளில் பிரசுரமாகும் அவரது சமூக-இலக்கியக் கட்டுரைகள் மூலமும் எம்மிடையே அறியப்பெற்றவர். வடமராட்சியில் அல்வாய்க் கிராமத்தில் பிறந்த இவர் நல்லூரை வதிவிடமாகக் கொண்டவர். கலைப்பட்டதாரியான இவர் ஆசிரியத் தொழிலில் இணைந்து, தற்போது யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார். அநாதரட்சகனின் 14 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவை கலை இலக்கியங்களில் சமூக நோக்கு: அவசியப்பாடு குறித்த பதிவு, சித்தர் பாடல்களில் சமூக நீதிக் கருத்துக்கள்: புறவய நோக்கு, பின்நவீனத்துவம் குறித்து- சாராம்சப் பகிர்வு, ஈழத்து நவீன கவிதைப் போக்கு சில குறிப்புகள், தமிழில் சினிமா சிலஅவதானங்களும் ஆதங்கமும், முற்போக்கு இலக்கியம்-புரிதல்கள் மீதான நோக்கு, நவீன கவிதைகளில் குறியீட்டு பிரயோகம், மார்க்சிய நோக்கில் அறம்-ஒரு தத்துவ நிலைப் பார்வை, ஒடுக்கப்பட்டோரின் கலகக் குரல்: தலித் இலக்கியம்-ஓர் அறிமுகக் குறிப்பு, கலை அழகியல், சமூகம் மார்க்சிய நோக்கின் அடிப்படைகள், உலகமயமாக்கலும் கல்வியும் வளர்முக நாடுகள் எதிர்நோக்கும் சவால்களும், கவிதையில் சமூகம் என்ற கருத்தாக்கம் சில குறிப்புகள், தமிழியல் வரலாற்றில் பேராசிரியர் க.கைலாசபதியின் பங்களிப்பு ஒரு பார்வை, பேராசிரியர் கா. சிவத்தம்பி தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்க இயலாத ஆளுமை ஆகிய 14 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. ஜீவநதி வெளியீட்டகத்தின் 47ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்