14844 ஞாபகிக்கத்தக்கதோர் புன்னகை.

கெக்கிறாவ ஸுலைஹா. கெகிறாவ: கெக்கிறாவ ஸுலைஹா, 32/21, செக்குபிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 120 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-53263-3-9, (ISBN: 978-955-53260-1-6 என்ற இலக்கமும் ஒரே நூல்விபரப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது). இந்நூலில் முன்னுரையைத் தொடர்ந்து, இயற்கையை அதிகமதிகமாய் ஆராதித்த ஏரிக்கரைப் புலவன் வில்லியம் வேட்ஸ்வேர்த், மௌனமாய் அழும் ஒரு சமூகம் தலித் இலக்கியம் – ஒரு பார்வை, சத்தியத்தின் நித்திய தரிசனம் மகாத்மா காந்தி, நினதான தியாகத்தையும் விட அன்புள்ளத்தை மெச்சி, நெல்சன் மண்டேலா, கீழ்மட்ட அமெரிக்க மக்களின் ஆஸ்தான கவி சார்ல்ஸ் புகோவ்ஸ்கி, அரசியலும் இலக்கியமும் கைகுலுக்கிக் கொள்கின்றன, கென்னடியின் பதவியேற்பு வைபவத்தில் கவிஞர் ரொபர்ட் ஃப்ரொஸ்ட், ஒரு கம்யூனிஸவாதிக்குள்ளிருந்து ஒலித்த கவிதைக்குரல் மாவோ சே துங் – மாபெரும் வரலாறு ஆகிய கட்டுரைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்